அழியா அழகு 47
கம்பனும் அப்படியே செய்கிருன். இராம லாவண்யம் என்னும் அமுத கலசத்தை எட்டிப் பிடிக்கும் ஆவலோடு எதை எதையோ அடுக்கு கிருன். முதலில் மைப்படிக்கட்டுப் போட்டு ஏறிப் பார்த்தான்: இராமலாவண்யம் எட்டவில்லை. அடுத்த படி மரகதப் படிக்கட்டுப் போட்டான்; இப்போதும் எட்டவில்லே. மரகதமும் சிறிய அளவிலே அடங்கு வதுதானே? எல்லேயின்றி விரிந்து கிடப்பது இவன் அழகு. அவரவர் தம் தம் கிலேயிலிருந்து வெவ்வேறு வகையில் இவன் அழகைக் கண்டு இன்புறுகிருர்கள். ஆயினும் இவன் அழகை முற்றும் கண்டவர்கள் இல்லை. இந்தப் பேரழகுக்கு எல்லேயற்ற ஒன்றை அல்லவா உவமை சொல்ல வேண்டும்?' என்று தோன்றியது. நீலப் பெரும்பரப்பாகிய கடல் அவன் உளக்கண்ணில் தோன்றியது. பல பல கோணங்களில் கின்று பார்க்கிறவர் களுக்கு வெவ்வேறு வகையில் அலேயெறியும் அவன் அழகுக்கு, அலேமறியும் கடல்தான் தக்க உவமை என்று ஒரு கணம் கினேத்தான்; கினேத்தவுடன் சொன்னன்; சொல்லும் போதே இது போதாதோ என்ற ஐயமும் உடன் குரல் எழுப்பியது
மறிகடலோ!
எனருன.
மையால் படிக்கட்டுப் போட்டு எட்டாமல், மரகதத் தால் படியிட்டும் எட்டாமல், மறிகடலால் படி அமைத்தும் எட்டாமல் இராமலாவண்யம் இன்னும் எட்டாப் பழ மாகவே இருக்கிறது.
கம்பன் விடவில்லை. கடலைச் சொன்னது முழுத்திருப் தியை அளிக்கவில்லை. கடல், தான் இருக்கும் இடத்துக்கு வந்து காண்பவர்களுக்குத்தானே காட்சி அளிக்கிறது? இவனே தன்னே நாடுவார் உள்ள இடத்துக்குத் தானே