அழியா அழகு 49
4
கம்பன் தோல்வியுற்ருன் என்று சொல்லத் தோன்று கிற தல்லவா? இல்லே. அவன் இங்கேதான் வென்ருன்உவமையில்ை அளவிட முடியாத இராமனது பேரழகை உணர்ச்சிச் சித்திரமாகக் காட்டிவிட்டான். சொல்வளம் படைத்த கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பன் தன் சொல்லின் எல்லேக்குள்ளே அகப்படுத்தாத பொருள் இல்லை. அவ லுக்கே அகப்படாமல் இருந்தது இராமன் வனப்பு. அதைச் சொல்வக் யிலே பிடிக்க முடியாதபோது, அதனினும் சிறந்த உணர்ச்சி வலையில் பிடித்து விட்டான். அந்த உணர்ச்சியைக் காட்டும் அடையாளங்தான், ஐயோ என்ற சொல். அறிவு தலைப்பட்டால் சொல் வரும்; அநுபவம் தலேப்பட்டால் உணர்ச்சி எழும்; சொல் அடங்கும் :இராமன் அழகைச் சொல்லால் சிறை செய்ய ஒண்ணுது; அதுபவத்தால் நுகர்ந்து உணர்ச்சி வயப்படலாம்' என்ப தைக் கம்பன் மைக்குக் குறிப்பாக உணர்த்துகிருன்; அதை அப்படிச் சொல்லாமல், தன் சொல் கழுவுவதையும், உணர்ச்சி விஞ்சித் தழுவுவதையும் இந்தப் பாட்டிலே காடகக் காட்சி யைப் போலத் தோன்றும்படி அமைத்து விட்டான்.
சிறந்த இசைக் கச்சேரி கடைபெறுகிறது; பலவகை மக்கள் கேட்கிருர்கள். 'ஆ' என்ன அருமையாகப் பாடு கிருர், இந்தப் பைரவியின் ஆரோகண அவரோகணம் எவ்வளவு கச்சிதமாக அமைகிறது! இந்தப் பிடியில்தான் சாக மூர்ச்சனே தெரிகிறது என்கிருர் ஒரு ரசிகர். இதோ இந்தக் கீர்த்தனையைத்தான் இவர் பாடப் போகிருர் என் கிருர் வேறு ஒருவர். அடே! மூன்று சுவரங்களுக்குள் அற்புதமாகச் சஞ்சாரம் செய்கிருரே! என்கிருர் மற் ருெரு வர். இவர்களுக்கு நடுவிலே ஒருவர், "த்ளோ. க்ளொ, ஐயோ!' என்று குழைகிருர். இத்தனே பேர்களிலும் பரம
வ. 4 -