உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அழியா அழகு

ரசிக சிகாமணி யார்? ஐயோ!' என்ருரே, அவர்தாம், மற்றவர்களின் அறிவு சொல்லாகப் பேசுகிறது. அவரோ உணர்ச்சி வசப்பட்டு. அந்த உணர்ச்சியை, ஐயோ!' என்று வெளியிடுகிரு.ர்.

கம்பன் இப்போது சொல்லால் கவிபாடும் கிலேயை மீறி உணர்ச்சியை வடிக்கும் நுட்ப கிலேக்கு வந்து, ஐயோ!' என்கிருன். அங்கேதான் அவன் இராமலாவண்யத்தைச் சொல்லாமல் சொல்லி விடுகிருன். கல்லாவின் கீழிருந்து வாயாலே சொல்லாமலே சின்முத்திரையினுல் ஞான தேசம் செய்த தென்முகக் கடவுளே, சொல்லாமற் சொன்ன துரை' என்று ஒருவர் போற்றுகிருர். இங்கே கம்பனும் இராமலாவண்யத்தைச் சொல்லாமற் சொன்ன துரை யாகவே காட்சி அளிக்கிருன். அவன் சொல்கிருன்; ஆனல் அகராதியிலே பொருள் காணும் சொல்லாலே சொல்ல வில்லை; உணர்ச்சியை விளக்கும் ஐயோ என்னும் அடை யாளச் சொல்லாலே சொல்கிருண்.

ஐயோ! இவன் வடிவென்பதோர்

அழியா அழகுடையான்.

5

அந்த ஒரு சொல், "ஐயோ!' என்னும் சொல், இராமன் அழகை அளவிட்டுச் சொல்லாமல் அநுபவத்தால் உணரச்செய்யும் சொல்லாக, எதுகையில் கின்று விளக்கு கிறது அந்தச் சொல் நமக்குப் புதியது அன்று. நாமும் எத்தனையோ முறை அதைச் சொல்கிருேம். ஆனல் நாம் அதைப் பயன்படுத்துவதற்கும் கம்பன் பயன் படுத்துவ தற்கும் எத்தனை வேறுபாடு காம், ஐயோ! என்ருல் அதைக் கேட்கிறவர்களுக்கு, தேளோ, பாம்போ? என்கிற எண்ணந்தான் எழும்; திருடனே என்று அஞ்சுவர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/58&oldid=523260" இலிருந்து மீள்விக்கப்பட்டது