பக்கம்:அழியா அழகு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮩ

யத்தைப் பல வகையில் ஆராயவும், படித்து இன்புறவும் ஏற்ற வகையில் என் ஆசிரியப் பிரானுடைய அருளும் கிடைத்தது. பல புதிய விளக்கங்களையும் நயங்களையும் கருத்துக்களையும் மேடைகளில் பேசுகையில் கேட்ட பல அன்பர்கள் அவற்றை எழுத்து வடிவில் அமைக்கவேண்டும் என்று விரும்பினர்கள். கம்பராமாயணத்தை முறையாக முதலிலிருந்து கடைசி வரையிலும் ஆராய்ந்து விரிவான வகையில் பல துறைகளாகப் பகுத்து எழுத நேரம் ஏது: "கலைமகள்' பத்திரிகை வாயிலாக மாதங்தோறும் கம்பராமா யணத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி வந்தேன். 17 கட்டுரைகள் ஆனவுடன் இப்போதைக்கு நிறுத்தினேன். மீண்டும் எழுதும் எண்ணம் உண்டு.

வந்த கட்டுரைகளைப் புத்தக உருவில் கொண்டு வந்தால் பலருக்கும் பயன்படுமே என்ற எண்ணத்தால் அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி வெளியிடலானேன். இதில் உள்ள கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதியவை அல்ல. சொல் ஈயம், பொருளாழம், காப்பிய அமைதி, பாத்திரத்தின் பண் போவியம் ஆகியவற்றைச் சில சில இடங்களில் எடுத்துக் காட்டி யிருக்கிறேன்.

இதில் உள்ள பதினேழு கட்டுரைகளில் இரண்டு, வாத முறையில் அமைந்தவை. பரதனும் குகனும் சந்திக்கும் போது யார் யாரை வணங்கினர்கள் என்பதுபற்றி, "வக் தெதிரே தொழுதானே' என்ற பாட்டை வைத்துக்கொண்டு புலவர்கள் பல காலமாக வாதம் செய்து வருகிருர்கள். அந்தப் பாடலுக்குக் கம்பனுடைய பாடல்களாகிய அகச் சான்று கொண்டே பொருளே வரையறுக்க ஒரு கட்டுரையில் முயன்றிருக்கிறேன். காட்சிப் படலத்தில் வரும் ஒரு பாடலுக்கு, வேறு ஓரிடத்தில் உள்ள பாடலைக் கொண்டு சொல்லுருவத்தைத் தெளிந்து பொருள் கூறியிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/6&oldid=523208" இலிருந்து மீள்விக்கப்பட்டது