பக்கம்:அழியா அழகு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அழியா அழகு

வேண்டுமென்றும் விருந்தளித்த நண்பரை அழைத்தார். அவர் அங்கே சென்றபோது தம் குழந்தையையும் அழைத் துத்கொண்டு போயிருந்தார். அவர் வீட்டையெல்லாம் பார்த்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருடைய குழந்தையோ வீட்டிலுள்ள கூடத்தில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. கூடத்தின் நடுவே தளத்தில் பூம் பொய்கையைப் போல ஒரு சித்திரம். தாமரை மலர்களும் அன்னங்களும் அப்பொய்கையில் இருந்தன. குழந்தை ஆசையோடு அந்தத் தாமரையின்மேல் கால் வைத்து, "பூ, பூ என்று குதித்துக் கொண் டிருந்தது.

அப்போது குழந்தையின் தங்தையும் அந்தக் கட்டிடக் சஆலஞரும் அங்கே வந்தனர். தளத்திலுள்ள சித்திரத்தை வந்தவருக்குக் காட்டிய கலைஞர். 'உங்கள் வீட்டில் அன்று பொறுக்கிக் கொண்டேனே. அந்த உடைசல்களைக் கொண்டு செய்தது இது" என்ருர்,

"என்னl' என்று வியப்பில் ஆழ்ந்தார். குழந்தையின் தந்தை. -

ஆம், உடைந்த பீங்கான் சில்களில் அந்த அந்த நிறத்துக்கு ஏற்றவற்றை அங்கங்கே பதித்து அந்தச் சித்திரக்கோலத்தை அமைத்திருந்தார் கலைஞர். எந்தச் சில்லின்மேல் குழந்தை கால் வைத்தால் இரத்தம் வரும் என்று தந்தை அஞ்சினரோ அதே உட்ைசல்களின்மேல் இப்போது அக் குழந்தை நடனமாடிக்கொண்டிருந்தது அந்தக் குழந்தைக்குப் பாத்திரத்தை உடைக்கத்தான் தெரிங் தது. உடைத்த துண்டுகளே ஒன்ருக்கிப் பதிக்கும் வகையில் பதித்து அழகுபடுத்தி விட்டார் கலைஞர். .

காமும் எத்தனையோ சொற்களே உடைக்கிருேம், அவற்ருல் பிறர் உள்ளத்தில் புண் உண்டாக்குகிருேம். கவிஞனே அதே சொற்களேத் தக்கபடி கவிகளில் பொருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/60&oldid=523262" இலிருந்து மீள்விக்கப்பட்டது