58 அழியா அழகு
(அனேய அந்தச் சொற்களே. சூழ்ந்த சுற்றிய. கலம்நன்மை. வீந்தது - அழிந்தது.1
இராமனுக்கு வந்த வாழ்வு கோசலைக்குரியது என்றும் பரதனுக்கு வந்த இழிவு கைகேயிக்கு உரிய தென்றும் வேறுபடுத்திக் காட்ட வருகிருள் கூனி. கைகேயி, கோசலை வாழ்ந்தனள் என்பதை மட்டும் காதில் வாங்கிக்கொண் டாள். "அப்படியா? அவள் வாழட்டும். அவளுக்கு முன்பே கல்ல வாழ்வு இருக்கிறதே. சககரவர்த்தியைக் கணவகை வும் பரதனைப் பிள்ளேயாகவும் பெற்றதைவிடப் பெரிய வாழ்வு அவளுக்கு என்ன இருக்கிறது?" என்ருள். அன்னவள் அவ்வுரை
உரைப்ப ஆயிழை. "மன்னவர் மன்னனேல்
கணவன், மைக்தனேல் பன்னரும் பெரும்புகழ்ப்
பரதன், பார்தனில் என்.இதன் மேல் அவட்
கெய்தும் வாழ்வு' என்ருள்.
(ஆயிழை - கைகேயி. கணவன் மன்னவர் மன்ன னேல், மைங்தன் பரதனேல்.)
கைகேயி, பரதன் தன் மகன் என்பதை மறந்து, அவன் கோசலையின் மகன் என்றே எண்ணியிருந்தாள். இராமனைத் தன் மகனென்றும், பரதனைக் கோசல மகனென்றும் எண்ணியிருக்கும் கைகேயியினிடம் தான் சொல்ல வந்த செய்தியைச் சொன்னாள் கூனி.
அவள் பேச்சில் நஞ்சு இருக்கிறது. ஒரு பெண்ணைக் கொலை செய்த இராமன் காளேக்கு முடிசூடப் போகிரு.ை" என்று தோற்றும்படி அவள் கூற்று இருக்கிறது.