பக்கம்:அழியா அழகு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அழியா அழகு

மாற்றம் கிகழத் தொடங்கி விட்டது என்பதையும் கம்பன் துட்பமாக இப் பாட்டில் காட்டியிருக்கிருன். மந்தரையை வைது கூறும் கைகேயி, நீ யாருக்கும் நல்லவள் ஆகமாட் டாய் என்று சொன்னாள். பரதகனப் பற்றிச் சொல்லுகை யில், 'என் மகன் பரதன் தனக்கு நல்லேயும் அல்லே' என்று கூறினுள். இதுகாறும் இராமனைத் தன் மகனென்றும், பரதனேக் கோசல மகனென்றும் எண்ணிய எண்ணத்தி லூடே ஒரு விரிசல் வந்து விட்டது. பரதன் தன் மகன் என்ற கினேவு அவளை அறியாமலே அவளேப் பற்றிக் கொண்டது. அவள் கூறிய வாய் மொழியில் அவளுடைய சினம் என்ருகத் தெரிந்தாலும் அதனூடே மறைவாக அவளுடைய உள்மனத்தே நிகழும் மாற்றமும் நுட்பமாகப் புலனுகின்றது. மனத்தின் ஆழத்தில் தோற்றிய அந்த துட்பமான மாற்றத்தை, "என் மகன் பரதன் என்ற பேச்சுக் காட்டுகிறது.

மேலே, உன் காக்கை அறுக்காமல் விடுகிறேன்; டோ 'ே என்று கைகேயி கடிந்து கொண்டாள். ஆயினும் கூனி. தன் சூழ்ச்சி பலிக்கத் தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டாள். சிறிதே விரிசல் தோன்றில்ை பிறகு பிரிப்பது எளிதல்லவா? கைகேயி எவ்வளவு வைதா அலும் அதைப் பொருட்படுத்தாமல் மேலும் பல கியாயங் களேக் கூறி, அவள் உள்ளத்தை அடியோடு மாற்றி விட் டாள். இராமனேக் காட்டுக்குப் போகும்படி செய்யும் அளவுக்குக் கைகேயி மாறிவிட்டாள்.

இந்த மாற்றத்தைப் படிப்படியாகத் தோற்றுவிக் கிருன் கம்பன், இராமனைப் பயந்த எற்கு என்றும், கோசலைக்குப் பன்னரும் பெரும் புகழ்ப் பரதன் மைந்தன்' என்றும் சொன்னவளே. 'என் மகன் பரதன்' என்று சொல்லும் அளவுக்கு மனம் மாறி, பின்பு மந்தரையிடம், "இந்த உலகத்தை தோன் என் மகனுக்குத் தந்தாய்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/68&oldid=523270" இலிருந்து மீள்விக்கப்பட்டது