பக்கம்:அழியா அழகு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாற்றம் 6.

கூறித் தழுவிக் கொள்கிருள்: ஆரமும் பொருளும் வழங்கு. கிருள்.

உரைத்த கூனியை உவந்தனள்

உயிருறத் தழுவி கிரைத்த மாமணி ஆரமும் நிதியமும் நீட்டி, * இரைத்த வேலைசூழ் உலகம்என்

ஒருமகற் கீந்தாய்; தரைக்கு நாயகன் தாய்தனி

நீ எனத் தணியா, !

(விரைத்த - வரிசையாக வைத்த இரைத்த - முழங்கிய வேலே - கடல். தரைக்கு நாயகன் என்றது. பரதன.)

இப்போது அவள் கீட்டிய ஆரத்தையும் நிதியத் தையும் முன்னே தந்த முத்து மாலையைப் போலக் கூனி. எறிவாளா? அவள் எண்ணம் பலித்து விட்டதல்லவா?

2

வேறு ஓர் இடம். இராமன் சீதையுடனும் இலக்கு வனுடனும் காட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். கங்கைக் கரையை வந்தடைந்தான். அங்கே குகன் தன் கூட்டத் தோடு வந்து அவனேக் கண்டான். இராமனைக் காணுவ தற்குக் கையுறைகளோடு வந்தவன் அவன்.

இராமனேக் கண்ணினல் ஆர்வத்துடன் பார்த்து, மண்ணுற வணங்கி எழுந்து வாய் புதைத்து கின்ருன்.. "உட்கார் அப்பா' என்று இராமன் சொல்ல, அவன் அமரி மனயின்றி கின்றுகொண்டே இருந்தான். இராமனிடத்தில் அவனுக்கு எல்லையில்லாத அன்பு

1. மந்தரை சூழ்ச்சி 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/69&oldid=523271" இலிருந்து மீள்விக்கப்பட்டது