62 அழியா அழகு
உண்டாயிற்று. தான் கொண்டு வந்த கையுறைகளை முன்னே வைத்து, 'தேனும் மீனும் தேவரீர் அ முது செய்வதற்கு ஏற்றபடி நல்ல முறையில் கொண்டு வந்தேன். திருவுள்ளம் எப்படியோ?" என்று மெல்லக் கூறினன். காட்டுக்கு அரசன் ஆதலின் தேனும், கங் கைக் கரைக்கு உரியவன் ஆதலின் மீனும் அவனிடம் மிகுதியாக உண்டு. அவற்றைக் கொண்டுவந்தான்.
இராமன் அவற்றைப் பார்த்தான். தேன் மட்டும் இருந்தால் அதனே ஏற்றுக்கொண்டிருப்பான். அதனுடன் மீனும் அல்லவா இருக்கிறது? ஆயினும் குகனுடைய வஞ்சகம் அறியா அன்பை அப் பெருமான் நன்கு உணர்ந்து கொண்டான், குழந்தையைப் போலத் தன்னிடம் உள்ள வற்றைக் கொண்டு வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைக்
- ff ☾jᎢ•
அருகில் வயசு முதிர்ந்த மாதவர்கள் இருந்தார்கள். அவர்கள் மீனைக் கண்டு சற்றே அருவருப்பு அடைந்திருக் கக் கூடும். அவர்களேப் பார்த்துப் புன்முறுவல் பூத்த படியே இராமன் குகனுக்குத் தன் அன்பைப் புலப்படுத் தினன்.
இருத்திஈண் டென்ன லோடும் இருந்திலன்; எல்லை நீத்த அருத்தியன்; 'தேனும் மீனும்
அமுதினுக் கமைவ தாகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
திருவுளம்?' என்ன, வீரன் விருத்தமா தவரை நோக்கி
முறுவலன் விளம்ப லுற்ருன். !
1. கங்கைப். 41.