பக்கம்:அழியா அழகு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - அழியா அழகு

மேலே. இராமனும் குகனும் பேசினர்கள். மறு நாள் காலையில் தோணிகளைக் கொண்டுவந்து தங்களை ஆற்றுக்கு அக்கரையில் சேர்க்கவேண்டும் என்று இராமன் சொன் ன்ை. இராமனுடைய கதையைக் கேட்டுக் குகன் வருந்தின்ை. அன்று இரவு குகன் அவர்களுடன் தங்கின்ை.

மறுநாள் விடிந்தது. போய் நாவாய்களைக் கொண்டு வா" என்று இராமன் குகனிடம் சொன்னன். அப்போது குகன், "நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள். நானும் என் தோழரும் உங்களுக்கு ஏவல் செய்து வாழ் வோம். உங்களுக்கு வேண்டிய வசதிகள் யாவும் இங்கேயே கிடைக்கும்" என்று சொன்னன்.

முதல் முதலில் இராமனேச் சந்தித்தபோது இருந்த குகன் காட்டு வாழ்க்கையை உடையவன். அன்பிலே சிறந்திருந்தவனுயினும் இராமனுடைய பழக்க வழக்கங் களைத் தெரிந்துகொள்ளாதவன். ஆதலின் தேனும் மீனும் கொண்டுவந்து வைத்தான். இப்போதோ அந்தக் குகன், 'இராமன் மீன் நுகராத கருணையாளன்' என்பதை உணர்ந்து கொண்டான். இராமன். கயமாகப் பேசிய பேச்சினலும், அவனுடன் ஓர் இரவு பழகிய பழக்கத் திலுைம் அவன் தெளிவு பெற்ருன். இப்போது பேசும் குகன் மனத் தெளிவு பெற்ற குகன். இந்த மாற்றம் விகழ்ந்ததைக் கம்பன் அவனுடைய பேச்சிலே காட்டு: கிருன்.

"இங்கேயே தங்கிளுல் உங்களுக்கு வேண்டிய உணவு கள் உள்ளன. எங்கள் உயிர் உள்ள மட்டும் உடன் இருந்து உபசாரம் செய்வோம். விளேயாட்டாகப் பொழு தைக் கழிக்கலாம். காடு இருக்கிறது. ரோடக் கங்கை இருக்கிறது. நான் இருக்குமட்டும் நீங்கள் இங்கே இருக்க லாம். வாருங்கள்' என்று அழைத்தான் குகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/72&oldid=523274" இலிருந்து மீள்விக்கப்பட்டது