மன மாற்றம் 65
" தேன்.உள, தினஉண்டால்;
தேவரும் நுகர்தற்காம்;
ஊனுள துணைநாயேம்
உயிருள; விளையாடக்
கான் உள; புனலாடக்
கங்கையும் உளதன்ருே?
நான்உள தனையும் நீ
இனிதிரு நடனம்பால்.”
(ஊன் உளதுணே - உடம்பு இருக்குமளவும். கான் - காடு. நான் உளதனேயும் . நான் இருக்கு மட்டும். நட எம்பால் - எம் இடத்துக்கு வா.1
இதில் முதலில் உள்ள,
"தேன்.உள தினை உண்டால்;
தேவரும் நுகர்தற்காம்'
என்ற அடியே குகனுடைய தெளிவைக் காட்டுகிறது. தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தினேன்’ என்று முதல் நாள் சொன்ன குகன் இன்று மாறிவிட்டான். 'தேன் உண்டு, தினே உண்டு என்று சொன்னதோடு கூட, எது பவித்திரம் என்பதைத் தெரிந்துகொண்டேன்' என்று குறிப்பிப்பவனேப் போல, தேவரும் நுகர்தற்கு ஆம் என்று அதற்குச் சிறப்பைத் தருகிருன்,
இராமன் தான் போகவேண்டிய அவசியத்தைக் கூறினன். அப்பால் அவர்கள் தோணி எறிக் கங்கை யைக் கடந்தார்கள். கரை கடந்தவுடன் மறுபடியும் குகன் ஒரு விண்ணப்பம் செய்துகொண்டான். கானும் உங்க ளுடன் வருகிறேன்' என்று அன்புடன் சொன்னன்.
1. கங்கைப். 55.
வ. 5