இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 அழியா அழகு
'காட்டிலே வழிகளைத் தேடிக் கண்டு பிடிக்க எனக்குத் தெரியும். நல்ல உணவுகளைக் கொண்டு வரத் தெரியும். நீங்கள் தங்குவதற்கு ஏற்ற உறைவிடத்தைச் சமைப்பேன். ஒரு கணமும் உங்களைப் பிரியாமல் வாழ் வேன். நானும் உடன்வரத் திருவுள்ளம் பாலிக்கவேண்டும்’ என்று கெஞ்சுகிருன்.
நெறியிடை கெறிவல்லே
கேடினன் வழுவாமல் கறியன கனிகாயும்
நறவிவை தரவல்லேன்' '
என்று பேசினன்,
இங்கும் இராமனுக்கு எது இனிய உணவு என்பதைத் தெளிந்த உணர்வோடு பேசுகிருன். கணியும் காயும் தேனும் கொண்டுவந்து தருவேன்' என்று சொல்கிருன். அதிலும் முன் இருந்த அவனது மனகிலே மாறியது புலனகிற தல்லவா?
1. கங்கைப். 6கி.