68 அழியா அழகு
பயணம் மிகவும் இன்றியமையாதது. அதற்கு உதவு கிருன் குகன். பின்பு சுக்கிரீவன் குரங்குப் படைகளுடன் தானும் படைத்துனே யாகிருன். விபீடணனே பல இரகசியங்களேத் தெரிவிக்கிருன்.
குகன் செய்த உதவி சிறியதாயினும் அது கைம்மாறு உகவாத உதவியாக இருக்கிறது. சுக்கிரீவனும் விபீடண லும் தம் தமையன்மாருடைய நாட்டைப் பெற்றர்கள். குகன் புதியதாக எதையும் பெற்றிலன். இராமனுடைய நட்பு ஒன்றையே பெறற்கரும் பேருக எண்ணி இன்புற்ருன்,
கம்பன் அவனுடைய இயல்புகளே இராமன் முன் வைத்தும், பரதன் முன் வைத்தும் நமக்குத் தெரிவிக் கிருன். இராமனேடு கம்மைக் கங்கைக்கரைக்கு அழைத்து ச் சென்று, அங்கே குகனேயும் வருவித்துக் காட்டுகிருன்; அவனுடைய தோற்றம், பேச்சு செயல், எண்ணம் ஆகிய வற்றை ஒவியம்போல விளக்குகிருன்.
வேடகிைய அவனுடைய இயல்புகளைச் சொல்வதற்கு முன்னல் இராமனே முனிவர்களிடையே விருந்தாளியாக இருக்கச் செய்கிருன். வால்மீகியில் இவ்வாறு இல்லை. என்பார்கள். -
குகனுடைய புறத்தோற்றம் கடுமையானது; ஆனல் உள்ளமோ அன்பு மயமானது. அவன் இயல்புகளே நேரே சொல்வதைவிட, முனிவர்கள் இராமனே வரவேற்று. உபசரிப்பதாகச் சொல்லிப் பிறகு அவன் வருகையைச் சொல்வதில் வேறுபாட்டு ஈயம் இருக்கிறது. முனிவருடைய உபசாரத்தையும் அன்பையும் ஏற்றுக்கொள்ளும் இராமன் நாவாய் வேட்டுவனுடைய அன்பையும் உணர்ந்து. உவகை அடைகிருன், "நீ என் தம்பி” என்று சொல்லும் அளவுக்கு, அவனுடைய கருணை விஞ்சி கிற்கிறது,