பக்கம்:அழியா அழகு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவாய் வேட்டுவன் 69

அயோத்தியை விட்டுப் பிரிந்து வந்த இராமன் இடையில் உள்ள காட்சிகளையெல்லாம் கண்டும் சீதைக்குக் காட்டியும் வழி கடந்து கங்கைக் கரையை அணுகின்ை. அப்போது அவனுடைய வரவை அறிந்த முனியுங்கவர்கள். "எங்கள் செல் கதி வந்தது என்று இன்புற்று வந்து மொய்த் தனர்; களிக்கூத்தாடினர்; பிறகு தம்முடைய தவப்பள்ளிக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். காய்களும் கிழங்குகளும் கனிகளும் தேடிக் கொண்டு வந்து, "தோன்றலே, நீ இந்தக் கங்கையில் நீராடித் தியோம்பி அமுது செய்ய வேண்டும்" என்று வேண்டினர்கள். அப்படியே இராமனும் சீதையும் ரோடினர். செய்ய வேண்டிய கடன்களே முறைப்படி செய்தபிறகு இராமன் அம் முனிவர்கள் அளித்த விருங்தை

நுகர்ந்து இன்புற்ருன்.

அந்தச் சமயத்தில் குகன் வந்தான். அவன் ஆயிரம் ஒடங்களே உடையவன். எப்போதும் வில்லே ஏந்தி யிருப்ப வன். கல் திரண்டாற்போன்ற தோளே உடையவன்.

கையில் குறிஞ்சி கிலத்திற்குரிய துடியை அவன் வைத்திருந்தான். காய்கள் அவனேச் சுற்றி கின்றன. காலில் தோற்செருப்பை அணிந்திருந்தான். இருட்டைப்போன்ற கிறத்தை உடையவன். அவன், பல ஏவலராகிய வீரர் கூட்டத்தோடு வந்தான்.

தமிழ்நாட்டில் குறிஞ்சி கிலத்தில் வாழ்பவர்களாகிய வேட்டுவர்களுக்குத் தெய்வம் முருகன். இங்கே கங்கைக் கரை வேட்டுவனுடைய பெயர் குகன் என்பது. அது முருகனுடைய திருநாமம். பொதுவாக இந்த காட்டில் வேட்டுவர் யாவருக்குமே முருகன் குலதெயவம் என்று தெரிகிறது.

தொடையளவுக்குக் கரிய சல்லடத்தை அணிந்திருக் தான் குகன். உயர்ந்த உருவத்தை உடையவன் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/77&oldid=523279" இலிருந்து மீள்விக்கப்பட்டது