பக்கம்:அழியா அழகு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அழியா அழகு

இலக்குவனேக் கண்ட குகன் அவனேயே இராமன் என்று எண்ணிவிட்டான். "தேவா, கின் கழல் சேவிக்க வந்தேன்: நாவாய் வேட்டுவன், அடியேன்" என்ருன்.

கூவா முன்னம் இளையோன் குறுகி, "நீ ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சின்ை: "தேவா! கின்கழல் சேவிக்க வந்தனென்; காவாய் வேட்டுவன் காய்அடி யேன்" என்ருன். '

இலக்குவன் அவனைப் பார்த்தான். அவன் பேச்சையும் கேட்டான். தாரத்தில் கிற்கும் அவன் கூட்டத்தையும் கண்டான். குகனிடம் நல்ல எண்ணம் அவனுக்கு உண்டாகி விட்டது.

தோற்றத்திலிருந்து குகனுடைய பணிவு தெரியாது. ஆனல் அவன் தன் குழாத்தினரைத் தனியே கிறுத்திவிட்டு. வில் லேயும் வாளேயும் வைத்துவிட்டு வந்ததில் அவன் பணிவு தெரிந்தது, அவன் பேசத் தொடங்குவதற்கு முன் இறைஞ் சியதில் அந்தப் பணிவு பின்னும் கன்ருகத் தெரிந்தது: அவன் பேச்சிலோ அது மிக கன்ருக வெளியானதோடு அந்தப் பணிவுக்குக் காரணம் அன்பு என்பதும் புலன யிற்று: 'கின்கழல் சேவிக்க வந்தனென்' என்றதிலும், 'காய் அடியேன்” என்றதிலும் பணிவும் அன்பும் மணந்தன.

இலக்குவன், "நீ இங்கே வில்' என்று சொல்லிவிட்டு உள்ளே புகுந்து இராமனைத் தொழுது சொல்லத் தொடங் கின்ை. 'உனனேக் காணும்பொருட்டு வந்திருக்கிருன். கிமிர்ந்து நிற்கிற கூட்டமாகிய சுற்றத்தோடு வந்திருக்கிருன். உள்ளம் தூயவன். தாயினும் நல்லவன். மோதுகிற நீரை உடைய கங்கையில் உள்ள காவாய்களுக்குத் தலைவன்; குகன் என்பவன்' என்று தெரிவித்தான்.

1. கங்கைப். 8ே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/80&oldid=523282" இலிருந்து மீள்விக்கப்பட்டது