பக்கம்:அழியா அழகு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அழியா அழகு

கண்டு அவன் உள்ளம் உருகியது. இருண்ட குஞ்சி மண்ணுறும்படியாகக் கீழே விழுந்து பணிந்தான்; அவன் உள்ளம் குழைந்ததுபோலவே உடம்பும் குழைந்தது. மேனி வளைத்து வாய் புதைத்து கின்ருன்,

அண்ணலும் விரும்பி, "என்பால்

அழைத்திரீ அவனை' என்ருன்: பண்ணவன் வருக' என்னப்

பரிவினன் விரைவிற் புக்கான்; கண்ணனைக் கண்ணின் கோக்கிக்

கனிந்தனன்; இருண்ட குஞ்சி மண்ணுறப் பணிந்து மேனி

வளைத்துவாய் புதைத்து கின்றன். '

(அண்ணல் - இராமன். அழைத்தி - அழைப்பாயாக. பண்ணவன் - இலக்குவன். கண்ணனே - கரிய கிறமுள்ள இராமனே; கண்போன்ற இராமனே என்றும் சொல்லலாம். புதைத்து - மூடி 1

குகனுக்கு கியிரும் இடத்தில் நிமிர்ந்து, பணியும் இடத்தில் பணியத் தெரிகிறது. அவனுடைய அன்பும் பணிவும் அவனுடைய உரையிலும் செயலிலும் ஒரு காலேக் கொருகால் மிகுதியாகி வருகின்றன.

1. கங்கைப். 40.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/82&oldid=523284" இலிருந்து மீள்விக்கப்பட்டது