82 அழியா அழகு
கார்குலாம் நிறத்தான் கூறக்
காதலன் உணர்த்து வான்: "இப் பார்குலாம் செல்வ நின்னை
இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள் வனேன்யான்;
இன்னலின் இருக்கை கோக்கித் தீர்கிலேன்; ஆன தைய
செய்குவன் அடிமை" என்ருன், ! (கார்குலாம் நிறத்தான் - இராமன். காதலன் - குகன் பார்குலாம் செல்வ - பாராகிய கிரம்பிய செல்வத்தை உடையவனே. சர்கிலா - பிடுங்கிவிடாத, இன்னலின் - துன் பத்தோடு. இருக்கை - இருப்பிடம். தீர்கிலேன் - போக மாட்டேன். ஆனது அடிமை செய்குவன் - என்னல் ஆன எவலேச் செய்வேன்.)
'உள்ளத்து அன்பினல் அமைந்த காதல் உடையவன்' ான்று இராமன் தெரிந்து கொண்ட பிறகு குகனே எப்படி அழைப்பது? கம்பன். காதலன்' என்று குகனேக் குறிக் கிருன். கிராகர்வேந்தன். எயினர்கோன் என்று அவன் தலைமையைச் சொல்லத் தெரிந்தவன் கம்பன். இங்கே குகனுடைய காதல் பேசுகிறது. இராமனிடம் அவனுக்கு இருந்த அன்பின் வேகம் பேசுகிறது. தன்ாலத்தை மறந்து தன்னல் காதல் செய்யப் பெறுபவர் கலத்தையே வினையும் காதல் பேசுகிறது. ஆதலின் காதலன் உணர்த்துவான்' என்று கவிச்சக்கரவர்த்தி சொல்கிருன். .
இராமனுக்கும் குகனுக்கும் முன்பே பழக்கம் உண்டென்று வால்மீகி முனிவர் கதையை அமைத்திருக்கிரு.ர். கம்பன் அப்படிச் சொல்லவில்லை. இப்போதுதான் முதல் முதலில் சந்திப்பதாக அப்புலவர் கோமான் அமைத்தான்.
1. கங்கைப். 44