தீராக் காதலன் 83
இராமன் பெருமையைக் குகன், கேள்வியால் உணர்க் திருக்கலாம். ஆல்ை இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு அன்பைப் பரிமாறிக்கொண்டது இப்போதுதான்.
கண்டபோதே இராமனுக்குக் குகனுடைய உள்ளம் தெரிந்து விட்டது. அவனுடைய உள்ளன்பை முனிவர்கள் உணரும்படி சொல்லி விட்டான். இப்போது அவன் இங்கேயே இருந்து அடிமை செய்வேன் என்பதைக் கேட்ட போது இராமன். அந்த அன்பைத் தன்னேடு சேர்ந்தவர்களும் உணர வேண்டும் என்று எண்ணினன். குகன் சொன்னதைக் கேட்டவுடன் இராமன் சீதையையும் இலக்குவனேயும் பார்த்தான். அந்த கோக்கம் இராமனுடைய உள்ளத்தை அவர்களுக்கு உணர்த்தியது. அவன் உள்ளத்தே, இவன் திராத காதலுடையவன்' என்று எண்ணும் எண்ணத்தை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள், இராமன் எண்ணத் தைக் கருணையினலே மலர்ந்த அவனுடைய கண்கள் காட்டின. உடனே திரும்பிய அக்கருணைக் கண்ணன், “யாகினும் இனிய நண்ப, இருத்தி ஈண்டு எம்மொடு” என்ருன்.
கோதைவிற்குரிசில் அன்னன்
கூறிய கொள்கை கேட்டான்; சீதையை கோக்கித் தம்பி
திருமுகம் நோக்கித் தீராக் காதலன் ஆகும் என்று
கருணையின் மலர்ந்த கண்ணன். 'யாதினும் இனிய நண்ப!
இருத்திஈண் டெம்மொடு” என்ருன். ' (கோதைவில் குரிசில் - மாலையை அணிந்த வில்லை யுடைய இராமன். அன்ன்ை - குகன். இருத்தி - தங்குக.)
1. கங்கைப் 45