விடைகொண்ட குகன்
'யாதினும் இனிய நண்ப, இருத்தி ஈண்டு" என்று இராமன் சொன்னதைக் கேட்ட குகனுக்கு உவகை பொங்கியது அவனைப் பிரியாமல் வாழும் வாழ்க் கைக்கு அது தொடக்கம் என்று அவன் நினைத்தானே?
இராமன் அடியைத் தொழுதான் குகன். இரவு அங்கே தங்குவதென்று முடிவான பிறகு அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்யவேண்டும் அல்லவா? உடன் வந்திருந்த தன் தோழர்களே அவ்விடத்தைச் சுற்றிக் காவல் இருக்கச் செய்தான். ஒருவரர், இருவரா? அவர்கள் வெள்ளம்போலப் பரந்து கின்ருர்கள், அக்காலத்தில் கங்கையை அடிக்கடிப் பலர் கடந்துகொண்டே இருந்தார்கள் போலும்! அவ்வளவு பேரையும் கரையேற்றத் தோணிகளும் ஆட்களும் அவனி .டம் இருந்தது வியப்-ன்று.
யாவரையும் சூழ இருந்து காவல் புரியும்படி சொல்லி விட்டுக் குகன் கையில் வில்லே ஏந்திக் கொண்டு கின்ருன்.
அடிதொழு துவகை தூண்ட
அழைத்தனன். ஆழி யன்ன துடியுடைச் சேனை வெள்ளம் பள்ளியைச் சுற்ற ஏவி, வடிசிலை பிடித்து வாளும்
வீக்கிவாய் அம்பு பற்றி இடியுடை மேகம் என்ன
இரைத்தவண் காத்து கின்ருன்."
1. கங்கைப். 46