பக்கம்:அழியா அழகு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகொண்ட குகன் 91.

"இன்று தோன்றி காளே மறையும் அன்பு அன்று என் அன்பு. என்னுடன் சேர்ந்தவர்களும் பொய்யான முறை. இல்லாதவர்கள். ஆதலின் கான் சொல்வது சம்பிரதாயத் துக்கு அன்று. உண்மையாகவே சொல்கிறேன்” என்று: முதலில் பீடிகை போட்டுக்கொண்டு தொடங்கினன்.

" பொய்ம்முறை இலரேம்.'

Iநாங்கள் பொய்யான உறவுமுறை இல்லாதவர்கள் '

காட்டுக்குப் போகவேண்டும் என்று சிற்றன்ன பெற்ற வரத்தை நிறைவேற்ற வந்தவன் இராமன். அவன் காட்டுக் குப் போனல்தான் கடமையைக் செய்தவ வைான். இப் போது குகன் அவனத் தன்னுடன் தங்கிவிடும்படி விண் ணப்பித்துக்கொள்ளப் போகிருன். அது இராமன் மேற் கொண்ட விரதத்துக்கு இழுக்கல்லவா? காட்டிலே போய் வாழ வேண்டியவன் இடையிலே தங்கலாமா?

இந்தக் கேள்விக்கு முதலில் விடையிறுப்பவனைப் போலக் குகன் பேசினன். "தாங்கள் இங்கே தங்குவதனல் தங்கள் விரதம் குலையாது. காட்டுக்குப் போக வேண்டும் என்பதே தங்கள் கடைப்பிடி. இந்த இடமும் வனந்தான்; ஆதலின் இங்கே தங்குவதனால் தங்கள் விரதம் குலைய வழி இல்லை” என்பதை அடுத்தபடி குறிப்பாகத் தெரிவித்தான்:

புகலிடம் வனமேயால்."

(எங்களுக்குப் புகலிடமாக இருப்பது காடுதான்.)

வனமே என்று ஏகாரம் போட்டுச் சொன்னன், காட்டிலே வாழப் புறப்பட்டுக் கங்கைக் கரையில் வாழலாமா என்ற ஐயத்தை நீக்குவதற்காக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/99&oldid=523301" இலிருந்து மீள்விக்கப்பட்டது