பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அவமானமா? அஞ்சாதே!



நேர்ந்த நிகழ்ச்சி நிகழ்ந்துவிட்டது. நிலைமையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட வேண்டுமே தவிர, கொந்தளித்துப் போய் காரியத்தைக் கெடுத்துவிடக்கூடாது.

சாதாரண மனிதர்கள் என்றால் அடிபட்ட பாம்பாக சீறி, சூடுபட்ட பூனையாகத் தாண்டி, சீண்டி விடப்பட்டக் குரங்காகக் குதித்து, மிதிப்பட்ட நாயாகக் குலைத்து, பிறகு மனதுக்குள் சமாதானம் ஆகிவிடுவார்கள். அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியை அவர்கள் மறந்தேபோய் விடுவார்கள்.

அறிவுள்ளவர்களுக்கோ அந்த அவமானம் அடி உரமாகப் பயன்படும். ஆணிவேராக உறுதிப்படுத்தும். கலங்கரை விளக்கமாகக் காட்சி தரும் வழிகாட்டும்.

எப்படி? அவமான நிகழ்ச்சியானது அறிவுள்ள ஒருவரின் அந்தரங்கத்தில் ஆழப்பதிந்து போய்விடுவதால், அங்கேதான் அறிவார்த்தமான திட்டங்களும், செயல் முனைப்புகளும், முயல்வேகம் புயல்வேகம் என்று புறப்பட்டுவிடும்.

அவமானங்கள் பலவிதம் என்றோமே! அவை பிறந்து பாய்ந்து வருகின்ற புற்றுகள் எங்கே உள்ளன? எப்படிப் புறப்படுகின்றன என்கிற தன்மையை இங்கே விவரமாகக் காண்போம்.

1. தன்னை பெரிய மனிதனாகப் பாவித்துக் கொண்டு வாழ்கிறவர்கள், தன்னைச் சுற்றி உள்ளவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற மமதைக்கு தீனிபோடுவதுபோல, தன்னை நாடி வருபவர்களிடம் தாறுமாறாகப் பேசிவிடும் தகாத குணம். தன்னைத் தேடி வருபவர்கள் மனதால் எப்படி வேதனைப்படுவார்கள் என்று எண்ணிப் பாராமல், தன்னை மட்டும் பெரிய ஆளாக எண்ணி விதண்டாவாதமாகப் பேசி மகிழ்பவர்கள். இப்படி ஒரு ரகம் இது ஒரு பெருமைப் பொறாமை.

2. தனக்கு எல்லா தகுதியும் திறமையும் உண்டு. தனக்கு நிகர் யாருமே இல்லை என்று தானே நினைத்துக்