பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

13கொண்டிருப்பவர்கள். தான் பெற்றிருக்கும் தகுதி மற்றவர்களுக்கும் உண்டு என்று தெரிந்து கொண்டதும், மற்றவரை அடுத்தவர்கள் புகழ்வதைக் கண்டதும், பொறுத்துக் கொள்ள முடியாமல் பூகம்பமாகக் குழம்பி, புண்படப் பேசி அவமானப்படுத்தி மகிழ்கிற இரண்டாவது இனம். இது மமதைப் பொறாமை.

3. இந்தத் துறைக்கு நாம்தான் துரை, தலைவர், வழிநடத்தும் ஆசான் என்ற நிலையில் இருப்பவர்கள். தங்களைப் போல் மற்றவரும் வர முயல்கிறார்கள் என்றால், அந்த நினைவையே தாங்கிக் கொள்ள முடியாமல், அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள இயலாமல், அடாத சொற்களை அள்ளி வீசி அவமானப்படுத்துவது. இது தகுதிப் பொறாமை, திறமைப் பொறாமை.

4. தாழ்வு மனப்பான்மையால், தன் திறமையை மதிப்பிடத் தெரியாமல் மற்றவர்கள் புகழப்படுவது கண்டு பொறுக்காமல், மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவோர் போல, வளர்பவரைக் கண்டு வைது தீர்த்து, அவமானப்படுத்த ஆர்ப்பரித்து, ஆனந்தம் காணும் குரூரப் பொறாமை.

5. நன்றாகப் பேசி நட்புள்ளவர்போல பழகி வந்தாலும், அவர் தம்மைவிட முன்னுக்கு வந்துவிடக் கூடாது என்பதை தன் நெஞ்சில் நிறுத்திக் கொண்டு, அவர் செய்கிற காரியத்திற்கெல்லாம் களங்கம் கற்பித்தும், குறுக்கு நெடுக்காக காரணம் சொல்லி அடிவயிற்றைக் கலங்க விவப்பதுபோல் அவமானப்படுத்தும் கொடுரப் பொறாமை.

6. மற்றவர்களை முன்னேற விடாமல் பார்த்துக் கொள்வதுடன், மறைமுகமாகவே பேசி, அவர்கள் 'துக்குள் குழப்பமும் கலவரமும் ஏற்படுவதுபோல் செய்து, உணர்வுகளை புண்படுத்தி, நடைமுறை திட்டங்களை 'சப்படுத்துவது போல இடைஞ்சல்கள் செய்து, அவமானம் செய்து மகிழும் நயவஞ்சகப் பொறாமை.

7 இருவரும் ஒரே துறைதான். ஒரே நிலைதான் சின்றாலும், இவன் வளர்ந்தால் என் மரியாதை என்ன ஆகும்