பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

21



உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது! எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு தீர்மானத்துடன் திட்டமிட்டு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள். திறமைகள் வளர்வது உங்களுக்கு சிறுமை அல்ல, பெருமைதானே.

கேள்வி கேட்டவர்களே உங்களைப் பார்த்து வெட்கப்படும்படி உங்கள் திறமையை வெளிப்படுத்திக் காட்டுங்கள். நீங்களும் வெளிப்படுங்கள். புகழ் வெளிச்சத்தில் பிரபலமடையுங்கள். எல்லாம் உங்களிடம் தான் இருக்கிறது.

வருகிற அவமானங்கள் எல்லாம், வருத்தி வாட்டுகின்ற நெருப்புச் சின்னங்கள் அல்ல. அவை தன்மானத்திற்குத் தருகின்ற சன்மானங்கள்.

என்னை வழிப்படுத்தி வாழ்வை நெறிப்படுத்திய அவமானங்கள் தொடர்கின்றனர்.