பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. விரட்டாமல் விடமாட்டோம்

இப்படி ஒரு சூழ்நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது. ஏனென்றால் அந்த சூழ்நிலையை விரட்டவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. வெல்லவும் இயலவில்லை.

வாயில் போட்ட ஒரு கசப்பான பொருளை விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. அப்படி ஒரு அவல நிலை.

'இக்கட்டான ஒரு மிருகத்தின் இரண்டு கொம்புகளுக்கிடையில் மாட்டிக் கொண்ட நிலைபோல்' என்ற ஒரு வாசகம் உண்டு.

(Between the horns of a dilemma).

இந்த ஒரு சூழ்நிலைதான். எனக்கு இன்றைய லட்சிய வாழ்வை அமைத்துத் தந்தது என்பது உண்மைதான். என்றாலும் அன்றைய நிலை? எரியும் அடுப்புமேல் அமர்ந்து கொண்டு, அக்கம்பக்கம் உள்ளவர்களுக்காக ஆனந்தப் பாட்டுப் பாடிக் கொண்டு சமாளிப்பவன் போல, சாகசம் நடத்தியிருக்கிறேன்.

அழகப்பா உடற்கல்விக் கல்லூரியில் D.P.E. பட்டம் பெறுவதற்காக மாணவனாகச் சேர்ந்தேன். அது தவறில்லை. ஜூன் மாதம் வந்து சேர்ந்து விட வேண்டும் என்பது கல்லூரியின் கட்டளை. அதுவும் தவறில்லை.

அந்தக் கல்லூரியின் சூழ்நிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல, அட்ஜஸ்ட் பண்ணியதுதான், எனக்குச் சிக்கலாக மட்டுமல்ல. பெரும் சீரியஸான அவமான நிலையையும் விளைத்துவிட்டது.

கல்லூரிக்கு 150 மாணவர்கள் மொத்தம் தேவை என்றால், முதலில் 200 பேர்களைத் தேர்வு செய்து சேர்த்துக் கொள்வார்கள். மாணவர்கள் உடல்திறனை சோதிப்பதற் காக, ஒரு வாரம் கடுமையான பயிற்சிகள் நடக்கும். அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இரவோடு இரவாக ஒடிப்