பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அவமானமா? அஞ்சாதே


பார்த்து, நான்தான் அவன் என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்குள்ளே பேசிக் கொள்வது போல, தடாலடிச் சொற்கள், தடுமாற்றமில்லாமல் என்னை நோக்கி வெளிவந்தன.

'இவன்தானே! மூஞ்சைப் பாரு! பெரிய கொம்பனாக்கும்! நம்மை ஜெயிக்க இந்த நாயால் முடியுமா? இவனை இங்கிருந்து விரட்டாமல் விடுவதில்லை என்று தொடங்கிய தூற்றும் புராணம் - காலம், நேரம் இடம் பாராமல் வகுப்பறையிலிருந்து கழிப்பறை வரை வந்து கொட்டியது. உணவு உண்ணுகிற இடத்திலும் உக்கிரமாகப் பாய்ந்தது.

அதுவும் நான் தனியனாக இருக்கும்போது, ஏச்சும் பேச்சும் எக்காளமிடும். எதிரிலிருந்து யாரும் பேசுவதில்லை. பக்கத்திலிருந்து மறைவான இடங்களிலிருந்து அசிங்கமான சொற்கள் அம்பாய் பாயும். ஆனால் அவர்களை யாரென்று அறிய முடியாது. அடையாளமும் தெரியாது.

ஒரு வாரம் இந்த நிலை என்னைத் திட்டுகின்றார்கள். மானம் போகும்படி மனம் நோகும்படி ஏசுகின்றார்கள் என்று புரிகிறது. ஆனால் அதற்கு காரணம் என்ன? என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கலக்கத்தில் புதுக்குழப்பம்.

பத்து நாட்கள் கழிந்த பிறகு தான், இது தனிப்பட்ட விரோதமில்லை. திறமைகளுக்கு இடையே எழுந்த சவால் என்று தெரிய வந்தது.

அந்தக் காலத்தில், மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் தான், உடற்கல்வி துறையில் சேர்வார்கள். அதனால் அவர்களுக்கு என்னை கெட்டிக்காரன் என்றதும், கேட்க சகிக்கவில்லை. பொறுக்க முடியவில்லை. என்னை இழிவுபடுத்தி சாடிவிட்டார்கள்.

அவர்கள் நினைத்தது போலவே, எனக்கும் ஓர் எண்ணம். இப்படி அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இரவு பகல் சகித்துக் கொண்டு இங்கே படிப்பது அவசியம்தானா? போய்விடுவோமே என்று யோசித்து முடிவுக்கு வரும்போது, கல்லூரிகளுக்கு இடையேயான ஓடுகளப் போட்டிகள் நடந்தன.