பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அவமானமா? அஞ்சாதே!


ஆனால் என் நினைவோ வேறு விதமாக இருந்தது. அவர் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சிரித்தவர்கள். தமிழ்த்துறையைச் சேர்ந்தவர்கள். எப்படியிருந்தாலும் எனக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு சமாதானமில்லை. அதற்குரிய பரிகாரததை நான் தேடித்தான் ஆக வேண்டும் என்று அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினேன்.

கவிதை எழுதத் தகுதி தமிழ்ப்படிப்புதான் என்றால் அதையும் படித்து பாஸ் எண்ணி விடுகிறேன் என்றேன்.

அதற்காக, தமிழ் எம்.ஏ. பட்டம் பெற்றேன்.

அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி, தமிழ் பட்டம் பெற்றால் போதுமா? எங்களது தமிழ்த்துறை இலக்கிய நூல்கள் போல, உங்கள் துறையில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள்.

கவிதை எழுதி அவர்கள் மனதைத் தொட்டு விட்டதற்கு பரிசாகப் பெற்றுக் கொண்டது, பொறுக்க முடியாத அவமானம்.

அந்த அவமானத்தால் நான் அழுது ஒதுங்கி விடவில்லை. ஆர அமர சிந்தித்து செயல்பட முயற்சி செய்தேன்.

தமிழில் விளையாட்டுத்துறை நூல்களை 100-க்கும் குறையாமல் எழுதிவிட வேண்டும். எழுதியே தீர வேண்டும் என்று நினைத்தேன். முடிவும் எடுத்துவிட்டேன்.

அவமானத்திற்கு பதிலாக கோபப்பட்டு திட்டி விட்டால் போதும் பதிலுக்குப் பதில் ஏசிவிட்டால் போதும். சந்தர்ப்பம் பார்த்து அவமானப்படுத்தியவர்களை காலை வாரிவிட வேண்டும். மான பங்கப்படுத்திவிட வேண்டும் என்பதுதான் சராசரி மனிதர்களின் குணாதியமாகும்.

நான் அப்படி வாழ ஆசைப்படவில்லை. ஆழ்ந்து சிந்தித்தேன். அதை நினைத்த வண்ணமே வாழ்ந்தேன்.

எனக்கு ஏற்பட்ட அவமானம். என் வாழ்வை திசை திருப்பும் அற்புதமான அறை கூவலாக அமைந்துவிட்டது. இது ஒரு வித்தியாசமாக அவமானம் மாறுபட்ட அனுபவம் என்று உணர்ந்தேன். உடற்கல்வித் துறையைச் சார்ந்த ஒருவனை தமிழ்படிக்க வைத்து, தமிழ் நூல்களை எழுத