பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

31


வைத்து தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதுத்துறையை ஏற்படுத்தச் செய்த அந்த அவமானப்பட்ட சூழ்நிலையை இன்றும், நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த மூதறிஞர், தமிழ்ப்பெரும் தலைவர் வாயிலே அந்த வார்த்தையே வரவழைத்த தமிழ்த் தாய்க்கு நன்றி சொல்கிறேன்.

தமிழ்துறை தலைவர், மதுரை பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்று பல பெரிய பொறுப்புகளை வகித்து தமிழ்ப்பணி செய்த டாக்டர்.வ.சு.ப. மாணிக்கம் அவர்கள்தான் என்னைக் கேள்வி கேட்டவர். கிளறிவிட்டவர். மனதைப் பதம் பார்த்தவர்.

இன்று அவரை நன்றியுடன் நினைக்கிறேன். வணங்குகிறேன்

அவர் அன்று அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கா விட்டால், . என்னை பலர் முன்னே தலைகுனிய வைத்திருக்காவிட்டால், இன்று நான் ஒரு எழுத்தாளராக ஆகியிருக்க மாட்டேன்.

தமிழைப் படித்துப் படித்து சுவைத்திருக்கும் வாய்ப்பையும் இழந்திருப்பேன்.

ஒடி ஒடி, ஆங்கில விளையாட்டுகளை தேடித்தேடி படித்துப் படித்து, நினைத்து நினைத்து புதிய நூல்களை எழுதி எழுதி திளைத்திருக்கவும் மாட்டேன். குவித்திருக்கவும் மாட்டேன்.

அவமானம் என்பது ஒருவரை ஆக்கப் பூர்வமான வழியில் செலுத்தி விடும் அற்புத நிகழ்ச்சி என்பதற்கு இந்த ஒரு நிகழ்ச்சியே சான்று.

என்னை அவமானப் படுத்தியவர்கள், என்னை அப்படி ஆளாக்க வேண்டும் என்று நினைத்து முனைந்து செயல்பட்டார்கள் என்று இன்றும் நினைத்து மகிழ்கிறேன். வாயாராப் புகழ்கிறேன்.

இன்னும் பல அவமானங்கள் இருக்கின்றன. என்னை எப்படி வழி நடத்தின என்பதையும் காண்போம்.