பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அவமானத்தின் கொடை - ஒரு கடை

'தடித்த எழுத்துக்கள்'

அவமானங்கள் எப்படி ஒருவரது தன்மானங்களைத் தட்டி எழுப்பி வீராவேசம் கொள்ள வைத்து, வெற்றிப் பாதையில் ஒருவித வெறியுடன் நடக்கத் தூண்டுகின்றன என்கிற கருத்தின் அடிப்படையில்தான், எனது அவமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து தருகிறேன்.

மற்றவர்கள் பட்ட அவமானத்தை எழுதினால், அது அவர்களுக்கு மரியாதை குறைவாகத் தெரியும். மான உணர்ச்சியைத் துண்டிவிடும். அவர்களும் மானபங்கப்படுத்தப் பட்டதாக நினைத்து சீறி விழுவார்கள். எகிறிக் குதிப்பார்கள்.

ஏன் அந்த வம்பு என்பதற்காக, என்னைத் துளைத்த அவமானங்கள், எப்படி என்னைத் துண்டின? துரத்தின? உறவை மறுத்து, உலகை வெறுத்து, ஒன்றையே நினைத்து, உறுதியாக செயல்பட வைத்தன என்பதைத்தான் இங்கே எழுதுகிறேன்.

சொந்த அனுபவம் என்பதால், எழுத சுகமாக இருக்கிறது. சம்பவங்களும் கலப்பில்லாத உண்மையாக இருக்கின்றன. ஆகவே, உங்களுக்கு படிப்பதற்கு சுவையாக இருக்குமல்லவா? அதற்காக...

இதோ என்கூட வாருங்கள். சென்னையில் உள்ள பிரபல வியாபார ரீதியான ரெங்கநாதன் தெருவிற்கு.

வீதியிலே ஒரு நிமிடம் கூட நிற்க முடியாதபடி கூட்டம் அலைபாயும். அதிலே நீங்கள் மிதந்தபடி போய்விடுவீர்கள். நீங்கள் நடக்கவே வேண்டாம். கூட்டத்தின் நெருக்கடியே உங்களை அலாக்காகத் துக்கிப் போய்விடும்.

  • அப்படிப்பட்ட தெருவில் உள்ள தெருவீட்டில்தான், ஒரு வீடு பிடித்து வாடகைக்கு குடியிருந்தேன். வீதியில் உள்ள