பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

37



ஒரு பள்ளியில் டிராயிங் மாஸ்டர். அவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்று வைத்திருந்தார். அவர் வெளிநாடு போகத் திட்டமிட்டிருந்தார் என்ற ஒரு தகவல். அவரிடம் தொடர்பு கொள்ள ஒரு மாதம் அறிமுகம் ஆகி அந்தக் கடையில் போய் சார்ந்து பேச ஒரு மாதம் அவரோடு நட்பை ஏற்படுத்திக் இாள்ள இரண்டு மாதம்

அவரது முயற்சிக்கு ஒத்தாசையாக அலைந்த இரண்டு மாதம் இப்படி நன்கு பழகிய பிறகு, என்மேல் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு விஷயத்தை வெளிப்படுத்தி வியாபாரத்தைப் பற்றிப் பேச இரண்டு மாதம் ஒரு வழியாய் எல்லாம் நடந்தது.

முதலில் கடைக்கு ரூ.6000/- என்று பேசி முடித்தோம். பணம் கொஞ்சம் குறைந்தது. ஒரு மாதம் கழித்துப் போய் பணம் தந்தால், 9000 ரூபாய் என்று ரேட் உயர்ந்து போனது.

அதிகம்தான் என்றாலும், கடை கிடைக்கிறதே சவால் முடிகிறதே என்ற சந்தோஷம் கேட்டதைக் கொடுத்தேன். பத்திரத்தை முடித்தேன். சாவியை கையில் எடுத்தேன். வேகமாக நடந்தேன்! எங்கே? வீட்டிற்கோ? இல்லை.

விளம்பரப் பலகை எழுதும் கடைக்கு 10 போர்டுக்குஆர்டர் தந்துவிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.

அந்தக் கடைதான் NC Sports கடை என்னும் பெயரில்இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கடைக்கார நண்பரின் தயவால் ஏற்பட்ட அவமானம். இன்று ஒரு கடையை விலைக்கு வாங்குகிற வேகத்தை அளித்ததல்லவா என் திறமையை வெளிப்படுத்த உதவியதல்லவா?

அவமானத்திற்கு நான் நன்றி சொல்கிறேன். அவமானப் படுத்திய அந்த இனிய நண்பருக்கு வணக்கம் சொல்கிறேன். கடைக்குரிய ரேட்டை அதிகப்படுத்திய பிறகும், கடையை விட்டுக் கொடுத்தாரே, அவருக்கு என் பணிவான வணக்கத்தைச் சொல்கிறேன்.

அவமானம் எழுப்பிய தன்மானம் நல்ல முடிவைத் தானே தந்திருக்கிறது. பின் ஏன் அவமானத்தைக் கண்டு சங்கடப்பட வேண்டும். விரும்பி ஏற்கலாமல்லவா?