பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

39


நிறைய வருமானம் கிடைக்கும் என்ற நப்பாசையில் கூட ஆரம்பிக்கவில்லை, நடத்தவில்லை. எனக்கு ஏற்பட்ட அவமானம்தான், இந்த எண்ணத்தைத் துண்டியது.

விளையாட்டுத் துறைக்கான நூல்களை எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில், நான் பல அச்சகங்களைத் தேடி அலைய நேர்ந்தது. அப்படி அச்சகம் கிடைத்தாலும், ஆர்வமுள்ள உரிமையாளர் கிடைக்கவில்லை. ஆர்வமுள்ளஉரிமையாளர் கிடைத்தாலும், தவறுகள் நிறைய வராமல் செய்கிற 'கம்பாசிட்டர்கள்' கிடைக்கவில்லை.

விளையாட்டுத்துறை நூல்களை கம்போஸ் செய்ய, வேலைக்காரர்கள் வேம்பாக வெறுத்தது. எனக்குத் தீம்பாக அமைந்தது. அதனால் அடிக்கடி அச்சகத்தை மாற்ற வேண்டியதாயிற்று.

கடைசியில், நண்பர்கள் அச்சகம் என்பதின் உரிமையாளர் மணி என்பவர் அறிமுகமானார். நல்ல உற்சாகம் கொடுத்து, எனக்குப் பல உதவிகளைச் செய்து, நண்பராகவும் ஆகிவிட்டார். அதிக எண்ணிக்கையில் அவரிடம்தான் நூல்கள் அச்சாகின. அந்த அமரரை மானசீகமாக வணங்குகிறேன்.

காலத்தின் கோலம் அவருக்கு மது குடிக்க யாரோ ஒரு பாவி கற்றுக் கொடுத்ததின் காரணமாக, அவரது வாழ்க்கைப் பாதையே, வழிமாறி, திசைமாறி, புயல்பட்ட வாழைத் தோப்பு போல ஆயிற்று. அவரை மாற்றவும் முடியவில்லை. அவர் அதற்கு 'சிஷ்யராகி' விட்டார். சின்னச் சின்ன குளறுபடிகள்.

ஒரு நாள், நான் வாங்கிப் போட்டிருந்த பிரிண்டிங் பேப்பர் ரீம்கள் குறைந்தபோது, அதை அவர் விற்றுவிட்டார் என்று தெரியவந்தது. ஏன் எடுத்தீர்கள் என்று கேட்டபோது, 'நான் விற்றது குற்றமில்லை'. உங்களை யார் முன் கூட்டியே கொண்டு வந்து இங்கு வைக்கச் சொன்னது? என்று அவர் கேட்க, நான் பேச, நட்பில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது.