பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அவமானமா? அஞ்சாதே!



வீடு கட்டத் தொடங்கியதும் எங்களுக்கு வழி வேண்டும் என்று கேட்டு வந்தார்கள். வீட்டிற்குள்ளே மற்றவர்கள் போய்வர வழிவிட முடியுமா என்ன? இருந்தாலும் கேட்டார்கள். ஆட்கள் கூட்டத்துடன் வந்து 'ஆ ஓ' வென ஆர்ப்பரிப்பார்கள். கடைசியில் காசு கேட்பார்கள். ஒருவருக்கும் தெரியாமல் காசு வாங்கிக் கொண்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஒவ்வொரு கட்சிக்காரராக வரத் தொடங்கினார்கள். ஏழைகளுக்குப் பாதை இல்லையா என்று பக்கத்து காலணியில் உள்ளவர்களும் பரிவோடு சேர்ந்து கொள்ள, நான் ஒருவன், எதிரே ஆயிரம் பேர் என்ற கொடுமையான நிலைமை ஏற்பட்டுவிட்டது. சப்போர்ட்டுக்கு கூட்டம் கூடியவுடன் அவர்கள் கோஷத்தில் ஒரு மாற்றம், வீட்டு முன்னாள் ஆர்ப்பாட்டம்.

4 அடி வழி வேண்டும் என்று முதலில் கேட்டவர்கள், என்னை இந்த இடத்தை விட்டு விரட்டும் வரை ஓயப்போவதில்லை என்று அவர்கள் 'தாய் பாஷையில்’ பேசிக் கலைந்தனர்.

இதற்கிடையில் வீட்டையும் கட்டி கிரஹப் பிரவேசமும் நடத்தி விட்டேன். என்ன எதற்கு என்று புரியாமலேயே, அவர்கள் என்னை எதிர்த்து, திட்டிக் கொண்டிருந்தனர், அதற்குத் தீனி போடுவது போல, சில உருப்படாத குட்டித் தலைவர்களும் ஒத்தூதினர்.

4 அடி வழி விட்டிருந்த எனக்கு, அவர்கள் நடைபாதையாகப் பயன்படுத்துகிறபோது ஏற்பட்ட இடைஞ்சல்களைப் பார்த்து, கொஞ்சம் பணம் செலவு செய்து, சில குட்டித் தலைவர்களை சரிப்படுத்தி, ஒருநாள் வழியை அடைத்துவிட்டேன்.

அன்று பல பெண்கள் வந்து போட்ட சத்தம், இன்று அந்த வார்த்தைகளை நினைத்தாலும் வாந்தியும் குமட்டலம் வருகிறது.