பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அவமானமா? அஞ்சாதே


பல மாதம் போராட்டம், போலீஸ், கோர்ட், வழக்கு சண்டை இப்படி ஏற்பட்டது. இன்று ஒரு சாதனை சரித்திரமாக ஆகிவிட்ட வீடு தந்த பாடுகள் பயங்கரம் தான்.

வீடு கட்ட வேண்டும் என்று ஒரு அவமானம் விரட்ட வீட்டைக் கட்டி முடித்தே ஆக வேண்டும் என்று பல அவமானங்கள் என்னை விரட்டி விரட்டி அடிக்க வந்த வேதனைகளிலும் சோதனைகளிலும் வெற்றி பெற்றது வெறும் வைராக்கியத்தால்தான்.

அவமானம் வரும். தன்மானத்தை தட்டி எழுப்பும் ஆனால், அதை விவேகமாக எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது நான் வாழ்வில் பெற்ற அனுபவம்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு எழுதினேன். வாயைத் திறக்காமல் சாப்பிட முடியாது. அது போலவே அவமானம் கிடைக்காமல், வாழ்வானது முன்னேற்றம் பெறாது. ஆகவே, அவமானத்தை ராஜமரியாதையுடன் சந்தியுங்கள். வெற்றி நிச்சயம் வந்தே தீரும். ஆமாம் சேரும்!

என் வாழ்க்கையில் நடந்தவைதான் உங்கள் வாழ்க்கையிலும் நிகழும். சோர்ந்து போகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, உங்களைப் பின்பற்றி புரிந்து கொள்ளும். சில உண்மை நிலைகளை தொடர்ந்து தருகிறேன். இது ஒரு ஆய்வான அறிவுரை அவ்வளவுதான்.

இளமையில் ஏற்படுகின்ற அனுபவங்களில், அதிகமாக ஏற்படுவது அவமானங்களாகத்தான் இருக்கும்.

வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வயதினரைவிட வாழத்துடிக்கும் இளைஞர்களுக்குத்தான் வழிகாட்டுதல்கள் வேண்டும்.

அவற்றையெல்லாம் சந்திப்பது எப்படி என்பதை இனிவரும் தலைப்புகளில் காண்போம்.