பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. என்ன செய்யலாம்?


இளைய தலைமுறையின் எழில் தீபங்களே! இனிய சிந்து பாடிடும், இதம் சுமந்து ஓடிடும் சிந்தனைகளுடன் ஆங்களைச் சந்திக்கிறேன்.

ஐந்தறிவுத்தனத்திலிருந்து கம்பீரமாக வளர்ந்து, தட்டழகு மொட்டு விரிந்து கவர்ச்சியாகக் காட்சியளிக்கிற கன்னிமைப் பருவம் உங்களுக்கு.

இஷ்டப்பட்டதெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுகிற, அடம் பிடிக்கிற, ஆரவாரிக்கிற, அனுபவப் படாத பருவம் உங்களுடையது.

இந்த உலகமே எனக்குதான். எல்லோருமே என்னிடம் வந்தாக வேண்டும் என்று எண்ணுகிற எடுப்பான சிந்தனைகள் சிலிர்த்துக் கொண்டு சீறிப்பாய்கிற தற்பெருமைகளும் உண்டு.

எல்லாம் சரிதான். எதுவும் தவறில்லை.

எங்கேயும் குறையில்லை.

எதிரே தெரிகிறது என்னவென்று பாருங்கள்.

எதுவும் இல்லை எண்பீர்கள்.

ஆனால் அதுவல்ல உண்மை.

எதிரே தெரியாதது. ஆனால் எதிரே நிற்பது உங்கள் எதிர்காலம்தான்

எல்லோருக்கும் அந்தக் கவலைகள்தான் அதிகம். இனம் புரியாத கவலையும் ஏராளம்தான்.

நீரலைகள் போல நினைவுக் குளத்தில் புரள்பவை. காதுகளுக்குக் கேட்டும் கேட்காமலும் ஒலித்துக் கொண்டிருக்கும் ரீங்காரச் சத்தம்,ம் ஹீ.ம் ஓங்காரச் சத்தம்.

ஓங்கார சத்தம் கூவுவது என்ன?