பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

59



Ghost அதை ஆங்கிலத்தில் Number என்பார்கள். ஆமாம். பேய் எண் என்பார்கள்.

அந்த 13-ம் நம்பரின் குணாதிசயம் என்று ஒரு ஒப்பற்ற ரகசியத்தையும் விளக்கிக் காட்டுவார்கள் சோதிட வல்லுநர்கள்.

13-ம் நம்பரைக் கூட்டினால் 4 வருகிறது. ஆக அதை இரண்டு மடங்காக ஆக்குகிறபோது 8 ஆகிறது. இந்த 4ம் 8ம் தான் பேய் நம்பர் என்கிறார்கள்.

இந்த எண்ணுக்குரியவர்கள் நல்ல காரியங்களைச் செய்கிறபோது நன்மை கிடைக்கும். புகழ் கிடைக்கும். உடல் நலம் மிகுதியாக கிடைக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் மானாவாரியாகக் கிடைக்கும்.

இந்த பேய் எண்ணுக்குரியவர்கள் இஷ்டம் போல் நடந்தால், தீய காரியங்களைச் செய்தால், தடுமாற்றமான சமுதாயத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்தால், பணம் கிடைக்கும். உயர்வும் கிடைக்கும்.

ஆனால் உயரே போன வேகத்தில் ‘சர்ரென்று' கீழே விழுவார்கள். சங்கடங்கள் தலை தூக்கும். தண்டனைகளும் வந்து குவியும். முடிவு பேரழிவுதான். பேரிழவுதான்.

எதற்கு இந்த முன்னோட்டம் என்றால்?

இளைஞர்களே! உங்கள் இளைய காலம் வயது 13-ல் தான் ஆரம்பிக்கிறது.

13 வயதிலிருந்து 19 வயது வரை Teen Age தொடர்கிறது. ஆக இந்த ஏழு ஆண்டுகளுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நினைப்பு, துடிப்பு, இறுமாப்பு, பூரிப்பு, சிலிர்ப்பு, சில்லரைத்தனமான நடிப்பு எல்லோரிடமும் இருக்கிறது.

சொன்னால் கேட்க மாட்டார்கள். தன்னால் சிந்திக்க மாட்டார்கள். பின்னால் வருத்தப்படுவார்கள் என்று இளமை கடந்த பெரியவர்கள் புலம்புவது உண்டு.