பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. காலங்கள் ஏழு


மனித இனத்திற்கு வாழ்கின்ற உரிமை நிறைய உண்டு. ஆண்டதையெல்லாம் கொண்டு குவிக்க, பிறர் பார்க்காமல் பதுக்கி இஷ்டப்பட்ட பொருள்களை அடைவதற்காக ஏய்க்க, மாய்க்க, உய்க்க என்று எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் வாழ்க்கையில் உண்டு.

ஆனால், நிரந்தரமாக வாழத்தான் முடியவில்லை. அதற்குள் ஆசையில் ஆளாய் பயந்து அலைந்து திரிந்து பேராசைக்காரர்கள் கணத்தில் பிணமாகிக் காணாமல் போனதையும் நாம் காணுகிறோம். அதுதான் மனித ராசி.

ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்பது கணக்கல்ல. எப்படி வாழ்ந்தார் அல்லது எத்தனை காலம் அமைதியாக வாழ்ந்தார்?

இந்தக் கேள்விக்கு கிடைக்கிற பதிலைப் பொறுத்துத் தான், ஒருவரின் வாழ்வு கணிக்கப்படுகிறது. புகழப்படுகின்றது.

காலம் வந்தது. காலனும் வந்தான். கொண்டு போனான் என்ற கதைதான். எழுதாத கதையாக, தொடர் கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆகவேதான், சிறப்பாக வாழ விரும்புகிற ஒருவர், காலத்தைப் பற்றி குறிப்பாகவும் பொறுப்பாகவும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கே காலம் என்றோம்!

காலம் என்றால் என்ன?

காற்று உண்டாக்குகிற பருவம்தான் காலம் என்பதாகும். கால் என்றால் காற்று. அம் என்றால் அழகு.

அடித்துக் கொண்டிருக்கும் காற்று. அழகாக இயற்கையை மாற்றி அமைத்து, பரவசத்தை உண்டாக்கி,