பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அவமானமா? அஞ்சாதே!



என்று அர்த்தம் முதலில் சம + தாயமாகத்தான் அமைந்திருந்தது.

ஏற்றத்தாழ்வு இல்லாத நீதி, நியாயம் நிலைத்திருக்கிற மனிதர்களின் சங்கமமாகத்தான் சமுதாயம் அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து தோன்றிவந்த சந்ததிகளுக்குள்ளே, ஆசைகள் பொறாமைகள் பிறந்த போது, சமுதாயத்தின் அர்த்தமே மாறிப்போயிற்று, கொள்கையும் குழம்பிப் போயிற்று.

ஆரம்ப நாட்களில் பொருள் தேவைப்பட்டது. நாளாக நாளாக அதில் ஆர்வம் ஏறிவிட்டது. அப்புறம் அதுவே ஆசையாகி பேராசையாகி வாழ்வின் வேட்கையாகி வெறியாகிவிட்டது.

ஆங்கில விஞ்ஞானி ஒருவர்."இதயம் இயங்குகிறது ஒருவித சத்தம் கேட்கிறது. அந்த சப்தம் 'லப்டப்' என்று இருக்கிறது" என்று கண்டு பிடித்தார்.

டப் (Dub) என்பது ஒருவித சத்தம்தான். நமது ஆட்கள் அதை டப்பு என்று எடுத்துக் கொண்டனர். டப்பு என்றால் பணம் என்று தெலுங்கில் சொல்லுவார்கள். இதயம் கூட டப்பு டப்பு என்றுதான் அடித்துக் கொள்கிறது. இதயம் பணம், பணம் என்று துடித்தால் இரத்த ஒட்டமும் அப்படித்தானே ஆரவாரிக்கும்.

அப்படிப்பட்ட மனோநிலைதான் இன்று மக்களிடையே புதராய் மண்டிக் கிடக்கிறது

அதனால் மனிதர்கள் எல்லாம், மனத்தாலும் குணத்தாலும் மாறிப் போய்விட்டனர்.

படிக்காதவர்களுக்குத்தான் பகுத்தறியும் அறிவு போதாது பண ஆசை பீறிட்டுக் கொண்டு வரும் என்பார்கள்.

இந்த மொழியெல்லாம் பொய்யாகிப் போய் நமது நாட்டில் வெகுகாலமாகிவிட்டது படித்தவர்கள்தான் பயங்கர திட்டங்களைப் போட்டு, சட்டத்தை வளைத்து,