பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அவமானமா? அஞ்சாதே!



ஏற இயலாத மேடு என்றால், அதற்காக அது களைத்து விடுவதில்லை. மேட்டைச் சுற்றி ஒதுங்கிப்போய் விடுகிறது அதன் நோக்கம் கடலுக்குப் போய் கலந்து விடுவது இடையில் ஏற்படும் வழித் தடங்கலைக் கண்டு, அரண்டுவிடாமல் மிரண்டு போகாமல், வழி கண்டுபிடிக்கிறதே. அதுதான் ஆற்றின் சக்தி. அதுதான் நீரோட்டம் என்ற பெயரைப் பெறுகிறது.

நீரோட்டமாக உங்கள் நெஞ்சத்தின் நினைவும், நிதம் நடத்துகிற செயல்களும் அமைந்துவிட வேண்டும்.

ஆனால், மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

1. எதைப் பார்த்தாலும் நின்று வேடிக்கைப் பார்ப்பது போய் முடிக்க வேண்டிய வேலையை மறந்துவிட்டு வாய் பிளந்து பார்த்தபடி நின்றுவிட்டு, வேடிக்கை முடிந்த பிறகு, புறப்பட்டுப்போவது.இது மிருக ஜாதியைச் சேர்ந்த கூட்டம்.

2. வேடிக்கை நடக்கிற இடத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு, அதை வியாக்யானம் செய்வது. விவரம் தெரிந்தது போல விலாவாரியாக விளக்கம் அளிப்பது, பிதற்றலாகப் பேசி, பெருமை பொங்க, தற்பெருமை தலை தூக்குவதுபோல, மற்றவர்களை ஒரு பார்வையால் கம்பீரமாகப் பார்த்துவிட்டுக் கலைவது. இது மிருகத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட உளறல் ஜாதி.

3. மற்றவர்களைக் கூட்டி வேடிக்கை பார்க்க வைக்கிற, மதியூக வேலைகளைச் செய்து வைக்கிற ஒரு கூட்டம். அந்தக் கூட்டம் மனிதர்களில் திறமையுள்ள ஜாதி.

இதில் நீங்கள் எந்த இனம் என்று தேடிப் பாருங்கள். விவரமில்லாமல் வேடிக்கை பார்ப்பவரா? பேசிப்பேசி பொழுதை போக்குபவரா? மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பவர்களா?

மற்றவர்கள் கவனத்தை உங்கள் பக்கம் இழுக்க முடியும் என்றால், உங்களிடம் ஒரு தனிப்பட்ட (சக்தி) திறமை ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

அந்தத் திறமை என்ன என்று தேடித் தெரிந்து கொள்வதே ஒரு திறமைதான். அந்தத் திறமை ஒன்றைத்