பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அவமானமா? அஞ்சாதே



இப்படிப்பட்டவர்களுக்கு இயற்கையும் துணை நிற்கும் இதயம் இருப்பவர்களும் உதவிக்கு வருவார்கள் இறைவனது ஆசிர்வாதமும் இருக்கும்.

இளைஞர்களே இங்கு பலதரமக்களின் பண்பாட்டு முறைகளைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை சதாநேரமும் எண்ணத்தால் வாசிக்கின்றீர்களோ, இதய பூர்வமாக சுவாசிக்கின்றீர்களோ அப்படியே நீங்கள் ஆகின்றீர்கள்.

நான் எங்கே உருப்படப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தபடியே வாழ்ந்தால், அப்படியே ஆகின்றீர்கள்.

நான் உயர்வேன். மற்றவர்களுக்கு ஒரு சான்றாக இருப்பேன். வாழ்க்கையில் சிறந்து காட்டுவேன் என்று நினைத்தால், அந்த எண்ணமே, உங்களை அற்புதமாக வழி நடத்தும், வாழ்விக்கும்.

அந்த உறுதியான எண்ணத்திற்கு இரண்டு கண்களாக இருந்து, கைகளாக மாறி, கால்களாக விரைந்து உதவுவன 1. விவேகம், 2. வைராக்கியம்.

உண்மையான லட்சியத்திற்கு உதவும் விவேகம். அதை விட்டுவிடாமல், கட்டுக்குலையாமல் வைத்து வளர்க்கும் வைராக்கியம் இரண்டும், உங்களுக்குள் ஊற்றாகிவிடும்.

அப்படிப்பட்ட தேடலைத் தொடருங்கள். தெரிந்து கொண்ட தேடலுக்குள் தெளிவான வழி முறைகளையும் தொடர்ந்து காண்போம்.