பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

அவமானமா? அஞ்சாதேஉங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளுகின்ற மெய் ஆகும். ஏன் என்றால் நீங்கள் மனிதராக இருப்பதற்கு இந்த மூன்றும்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த மூன்றும் இல்லை என்றால் நீங்கள் மனிதராகவே இருக்க முடியாது.

எதையும் செய்தவற்குப் பெயர்தான் உடல், உடலுக்கு நிச்சயம் வேகம் உண்டு. இப்படி செய்ய வேண்டும் என்று துட்பமாக திட்பமாக கட்டளை இடுவதற்குப் பெயர்தான் மூளை. எப்பொழுதுமே மூளைக்கு விவேகம் உண்டு. அந்த உடலின் வேகத்தையும் மூளையின் விவேகத்தையும் ஆற்றுப்படுத்துகிற அகத்திலே உள்ள பெரிய சக்திதான் ஆத்மா என்பது. அந்த ஆத்மா இருக்கிறவரை உங்களுக்கு யோகம் நிறைய உண்டு.

இதை நீங்கள் எவ்வளவு உயரம் வளர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்ளும் முயற்சிக்குப் பெயர்தான் தேடல் தெரிந்து கொண்டதில் பெறுகிற தெளிவுக்குட் பெயர்தான் ஞானம்.

இந்த ஞானத்தைக் காட்டுக்கு ஓடியோ, கட்டைப் பிரம்மச்சாரியாக மாறியோ, தியாகம் செய்தால்தான் பெற முடியும் என்பது தவறு. இதை வீட்டிலும் பெறலாம். வேறு எந்த நிலையிலும் பெறலாம். வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் உள்ளத்திலே உருவாகின்ற வேட்கை. இந்த வேட்கையில் வேகமும் விவேகமும் யோகமும் கொண்டு இருந்தவர்கள்தான், வாழ்க்கையில் புகழ் பெற்றவர்களாக விளங்கி இருக்கிறார்கள்.

ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த குருஷேவி ரஷ்யாவை ஆண்டார். செருப்பு தைத்து வேலை செய்த ஆபிரகாம்லிங்கன் அமெரிக்காவை ஆண்டார். பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்த ஹிட்லர் ஜெர்மனியை ஆண்டார். ஆக வேறு எந்த நிலையில் இருந்தாலும் எல்லோரும் வாழ்த்தும்படியாக உயரலாம். உயர்த்திக் காட்டவும் முடியும். இதுதான் வரலாறு காட்டும் வாழ்க்கை.