பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அவமானமா? அஞ்சாதே!



கலை வடிவம் பெற்ற மரத்திற்கு எத்தனை தேய்ப்பு? உடைப்பு?

மனிதர்களில் முன்னேறிய அனைவருமே இப்படி அடிவாங்கி அழுதவர்கள்தான். உதை வாங்கி உதிர்ந்தவர்கள்தான். வாழ்வை முடித்துக் கொள்வோமா என்று ஏங்கி வதங்கியவர்கள்தாம்.

இப்படி ஒரு வாழ்வு வாழத்தான் வேண்டுமா என்ற ஒரு கேள்வியைக் கேட்டு, இதற்குப் பரிகாரமாக வாழ்ந்து காட்டுகின்றேன் பார் என்று உழைத்தவர்கள் தாம்: தாழ்வு மனப்பான்மையை உதைத்தவர்கள் தாம், இன்று செயற்கரியனவற்றை செய்து காட்டிய சரித்தி சாதனையாளர்களாகத் திகழ்கின்றார்கள்.

ஆடு மேய்த்தவர்கள் நாட்டின் ஜனாதிபதி ஆனார்கள். செருப்புத் தைத்தவர்கள் ஒரு நாட்டின் சர்வதிகாரியாய் ஆனார்கள். விளம்பரத்தட்டி எழுதியவர்கள் கூட வரலாற்று நாயகர்களாய் மாறி வந்திருக்கின்றார்கள்.

எப்படி?

அவர்கள் பட்ட அவமானங்கள்தான். அவர்களது அடிமனத்தை உரசிப் பார்த்து, ஆற்றலை வெளிப்படுத்தி வைத்தன.

புத்தனை மகான் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். ஏசுவை இறைமகனே என்று இறைஞ்சுகிறோம். அவர்கள் படாத அவமானங்களா நாம் படப்போகிறோம்?

ஒருவன் புத்தரிடம் வந்தான். அவரை அவமானப் படுத்த ஆசைப்பட்டான். கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான். கேவலமான பாஷையால், கீழ்த்தமான பாணியில் கொட்டித்தீர்த்தான். திட்டியவன் நாவுக்கும் சோர்வு வந்ததும். வாய்க்கோ வலியும் வேதனையும் வந்தது. ஆனால், கேட்ட புத்தரின் முகத்தில் கொஞ்சம்கூட கோபமும் இல்லை. தாபமும் இல்லை.

திட்டியவனைப் பார்த்து, தீர்ந்ததா உன் வார்த்தைகள்? தணிந்ததா உன் ஆத்திரங்கள் என்று கேட்டார். அவனும் ஆவேசமாக, இல்லை. இன்னும் இருக்கிறது என்றான். நான்