பக்கம்:அவள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

59


ஆனால் பாஸ்கர், திவாகர் ஒன்றும் dull boy அல்ல. அதற்கென்ன, உன்மாதிரி தங்கப் பதக்கம் வாங்க முடியாது என்னால், என்னிடம் முயற்சி என்கிற பெயரில் உடலுக்கும் மனதுக்கும் வரவழைத்துக்கொள்ள உற்சாகம் மட்டும் இருந்தால், உன் தயவே எனக்கு வேண்டாம். ஆனால் அவ்விதமான முயற்சியே எனக்கு ஒரு bore. அதனாலேயே அதை நான் படவில்லை. எதிலுமே எனக்கு அலுப்பு. எல்லாமே வசதியின் கோளாறுதான். வசதியே ஒரு பீடை.

அப்படி உனக்குச் செல்வத்தின் பாரம் தாங்க முடியாவிட்டால் வாரி வழங்கேன்! ஆஸ்பத்திரி, கோயில், அனாதை இல்லம், டொனேஷன்-என்ன இல்லை' என்கிறாயா? அங்கேயும் எனக்கு ஒரு fixation. தர்மம் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அழித்தாலும் அழிப்பேன், கொடுக்கமாட்டேன். என்னுடன் அது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது. சும்மாக் கொடுப்பதால் உண்மையில் சைத்தான் பட்டறையும், சோம்பேறிப் பண்ணையும், corruptionஉம்தான் வளர்கின்றன. நான் கண்மூடத்தான், ஒட்டுண்ணிகளும் பருந்துகளும் கழுகுகளும், நீ குறிப்பிட்ட பெயர்களில் காத்திருக்கின்றனவே! ஒப்படைக்க என் உயிர் வேளையிலேயே என்ன அவசரம்?

'கலியாணம் பண்ணிக்கொள்ளலாம்' என்பாய். Enough. drop it.

அப்புறம் இன்னொரு விஷயம். இப்படி எல்லாமிருந்தும், எல்லாவற்றிலும் அலுப்புத் தட்டியவனிடம், தனியாக ஒரு குரூரம் வளர்கிறது. தான் இன்பம் காண முடியாமையால், பிறரைத் துன்புறுத்துவதில் ஒரு இன்பம். அதுவே ஒரு பொழுதுபோக்கு. அவனவன் ரத்தத்தைப் பரிசோதனை செய்தால், அதன் அணுக்களில், நீரோக்களும், கலிகுலாக்களும்தான் நீந்துகிறார்கள். இதயத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/103&oldid=1496859" இலிருந்து மீள்விக்கப்பட்டது