பக்கம்:அவள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

61

உள்ளே, கருநீல மெத்தையில், ஒரு ஜோடி தொங்கட்டான்கள். அனுவுக்குத் தோளுக்கு இறங்கக் கூடும். ஆனால், பாஸ்கர் உன் முகத்தைத்தான் ஒரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆ! உன் கண்களில் என்ன ‘குபீர்’—உன்மேல் தப்பே இல்லே பாஸ்கர், மனித எடையே அவ்வளவுதான். நான் ஏன் கலியாணம் செய்துகொள்ளவில்லை தெரிகிறதா?

‘நிஜ வைரம்போல இருக்கே!’ என்றாய்.

“Put it on, lady” அவசரப்படுத்தினேன்.

ஆனால் அனு, பெட்டியை உள்ளங்கையில் தாங்கிய படி, உதட்டில் புன்னகையின் நிழலாட, நகையைச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். விழிகளில் பெரும் ஆழம். அனுவுக்குக் கண்கள் + பாயின்ட். அந்த சமயத்தில் அந்த பாப்பாக்களுள் ஏதேதோ, ஏதேதோ நான் பார்த்திராத மீன்கள் நீந்துவதுபோல எனக்குப் பிரமை தட்டிற்று.

இதற்குள், என் கைக்கடியாரத்தில் வினாடிகள், நான் செவிக்கு வைக்காமலே, அவைகளின் நொடிப்புக் கேட்டது போல்—அதுவும் பிரமையா, நிஜமா?

“அனு, நான் மாட்டிவிடட்டுமா” ஐயோ பாஸ்கரா! என்ன பரிவோ?

“Take it, take it!”

“போட்டுக்கோ அனு, திவாகர் என்னுடைய dearest friend”

Oh, my secret laughter!

அனு, ஒரு பெருமூச்செறிந்து, பெட்டியை என்னிடம் நீட்டினாள். மறுப்பில் தலையை ஆட்டினாள்.

“வாங்கிக்கொள் அனு, இதை உனக்குக் கொடுக்க எனக்குச் சக்தியிருக்கிறது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/105&oldid=1496872" இலிருந்து மீள்விக்கப்பட்டது