பக்கம்:அவள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

லா. ச. ராமாமிருதம்

“No. Thanks. வேலைக்குப் போவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கு உடல் வணங்கும் தன்மையும் எனக்குக் கிடையாது. வேலையிலிருந்து களைத்து வரும் ஆண்பிள்ளைக்குக் குளிர்ந்த தீர்த்தமேனும் கொடுக்கக் காத்திருக்க வீட்டில் ஒரு பொம்மனாட்டி வேண்டாமா?”

“அப்போ கஷ்டப்பட்டு காலேஜ் படித்து, டிகிரி வாங்குவானேன்?”

“ஓ, அது கலியாணத்துக்குக் காத்திருக்கும்வரை, உருப்படியா ஒரு பொழுதுபோக்கு. வாய்ப்பாட்டு, வாத்தியம், the gentle arts எனக்கு வராது. அதனால் என்ன? இஷ்டப்பட்டால் ஒரு பொம்மனாட்டிக்கு வீட்டிலேயே எத்தனை போழுது இருக்கு தெரியுமோ?”

“இந்த நாளில் இரண்டுபேர் சம்பாதித்துமே போது வில்லை என்பதுதானே பொதுவான புகார்? உனக்குத் தெரியாததல்ல” என்று முனகினேன்.

“அதனால்? பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றுவது புருஷன் பாடு அதில் நான் ஏன் புகனும்? பெண்டுகளின் வேலை இன்னதென்று இயற்கையே கோடு கிழித்து விட்டிருக்கே! அதுதான் கிராமவாசத்தின் தத்துவம்— அல்லது கோளாறா?” இப்படிச் சொல்லி விட்டு அவன் உன்னைப் பார்த்த பார்வை...

பாஸ்கர், உன் மனைவியை நீ பார்க்க உனக்குச் சொல்லிக் கொடுப்பதன் அதிகப்ரசங்கித்தனம் எனக்குத் தெரியாததல்ல. அதற்குக் கண் வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் பொழுதில்லை அதுவும் தெரிகிறது. எவனோ ஒரு மார்வாடியிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாய். இடம் மாறவும் உனக்கு மனம் இல்லை. Economicsஇல் இதை commercial inertia என்பார்கள். அவன் நன்றாய்த்தான் கவனித்துக்கொள்கிறான் என்று உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/108&oldid=1496875" இலிருந்து மீள்விக்கப்பட்டது