பக்கம்:அவள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

69

அப்போது நம் மூவரின் ஒன்றான சிரிப்பு, இப்பக்கூட நினைப்பில் ஒலிக்கிறது!

Freud வந்தபின் இதை என்ன சொல்வான்? Sex War on a grand scale” என்பானா? Love-hate, hate-love theory ஐச் சேர்ந்ததா?

மனுஷன் ஒற்றுமை வேற்றுமை என்கிறோமே, ஆனால் உண்மையில் இரண்டுக்கும் என்ன barometer? திவாகர் நீங்கள் சொல்லமுடியுமா? மனது என்று ஒன்று இருக்கிறது. அதன் ஒட்டம் என்று ஒன்று இருக்கிறது. அந்த ஒட்டத்தின் படு ஆழத்தின் அந்தகாரத்திலிருந்து எழுந்த சுழிப்புகளின் வெளித்தெரிந்த மட்டம்தானே நாம் போட்டுக்கொள்ளும் சண்டைகள், பண்ணிக் கொள்ளும் சமாதானங்கள், காரைப் பூச்சுக்கள், மீண்டும் வெடிப்புகள்—என்கிற மேலொட்டின வித்தியாசங்கள்! நாமே அங்கிருந்து வத்தவர்கள்தானே—the dark eternal womb of creation என்பது மனம் அல்லாமல் பின் என்ன?”

அவள் அப்படிச் சொன்ன அப்பவே, ஒரு நக்ஷத்ரம் உதிர்ந்தது Thrill அனு, நீயா கிராமத்துப் பெண்? சட்டி, பானை தேய்க்கத்தான் எனக்கு இஷ்டம் என்று சொல்லிக் கொள்பவள் நீயா அனு? நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுவதுபோல், நக்ஷத்திரத்தை உதிர்த்துக் காட்டுகிறாயே, நீயா அனு? நீ பயத்துக்கு உரியவள், ஹூம்—

'So!' 'அனுவின் பெருமூச்சு. பேச்சினும் பேசும் பெருமூச்சு, தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மறுபடியும் இப்போ ஒரு கட்டம் வந்துவிட்டது. நாட்டுப் பெண்கள் நாலுபேர் வந்தாச்சு. ஆனாலும் சிசுருஷையெல்லாம் பாட்டிதான். மத்தவாளை விடவில்லை. ஏற்கனவே புனர்ப்பாகம். அதை இன்னும் மையா, புளிக்காத மோரிலோ, பாலிலோ கரைச்சு திப்பியை எறிஞ்சுட்டு, நினைப்பில்லாத வாயில், சிறுகச் சிறுகச் செலுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/113&oldid=1496900" இலிருந்து மீள்விக்கப்பட்டது