பக்கம்:அவள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 லா. ச. ராமாமிருதம் "ஆமாம், எல்லாம், காக்கை உட்காரப் பனம்பழம் விழ" இப்படியும் ஒரு வாதம் உண்டு. ராமாயணத்திலேயே ஜாபாலி இருந்திருக்கார்- அதுவும் உண்மைதான், எதுவும் உண்மைதான் ஆனாலும் பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தேஹி பதிம்தே ஹி. ட திம்தேஹறி பதிம் வானம் குமுறிற்று. அப்பத்தான் நானே மீண்டேன். எப்படி, இப்படி எப்போ, இருண்டது? முகம் தெரியா இருளிலிருந்து அசரீரியாக அவள் குரல் பிரிந்து வந்தது. "ஒண்னு தெரியறது. முடியறவாளுக்கு எப்பவும் முடியும். முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்த மில்லை.” "புண்ணிய வசனம் சொன்னாலே மழை வரும்னு சோல்லுவா." அவசரமாக எழுந்து கீழே இறங்குவதற்குள் மழை இறங்கிவிட்டது. நிமிஷமா கொட்டோ கொட்டு. "திவாகர் நீங்கள் ரூமூக்குப் போக முடியாது.” ஒரு விரிப்பையும் தலையணையையும் கொணர்ந்து கூடத்தில் போட்டாள். சோபாவில் புரள இடமில்லை. உடம்பு suséâgo. Goodnight!” ஆனால் தூக்கம் வரவில்லை. ஏதேதோ யோசனை கள், ஆனால், பிடிபடவில்லை, ஏதோ வகையில் நான் உள்ளுர கிடுகிடுத்துப் போயிருந்தேன். நான் லக்சமனக் காவல் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால். பாஸ்கர், நான் உன்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவனில்லை? எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக் கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/116&oldid=741454" இருந்து மீள்விக்கப்பட்டது