பக்கம்:அவள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii



 

***

சொந்த ஊரானாலும் லால்குடி மண்ணை அடிக்கடி மிதிக்கிறேன் என்று சொல்ல முடியாது. வயிற்றுப் பிழைப்புத்தான் ஆளை அம்மானை ஆடிலிடுகிறதே!

சிந்தாமணி, மெயின் கார்டு கேட், திருச்சி டவுனைத் தாண்டினதும் லால்குடிக்கு மகிழ்ச்சியான பிரயாணம். இருபது வருடங்களுக்கு முந்திய நிலையைச் சொல்கிறேன்.

பஸ் வேகத்தில் ஒரு பக்கம் வாழைக் கொல்லைகள், எதிர்ப்பக்கம் தென்னஞ் சோலைகள் பாய்ந்து செல்கின்றன. ஒரு பக்கம் பாளம்பாளமாய, பசும்பொன் தகடுகளாய்,பாவாடை மடிகள்போலும் வாழையிலைகள் ஆடுகின்றன, அசைகின்றன. எதிர்ப்பக்கம் தென்னை மட்டைகள் சாமரம் வீச, மட்டைகளினிடையே, முண்டும் முடிச்சுமாய் இளநீர்க் குலைகள் ஏக்கம் பயக்கின்றன.

"வாங்கோ வாங்கோ சோழம் பார்க்க வாங்கோ!' இயற்கை மங்கை வரவேற்கிறாள்.

இடையிடையே பாலங்களினடியில், தனித்தனித் துறைகளில் ஆடவரும் பெண்டிரும் நீராடுகின்றனர். புடவையை ஒற்றைச் சுற்றில் மார்பில் அழுத்திச் சொருகிக் கொண்டு, தைரியமாய் நடுத் தண்ணிரில் நீந்துகின்றனர். துளையல் லெறியில், அவர்கள் உறிஞ்சி உமிழும் தண்ணிர், மத்தாப்பு வீச்சில் மீண்டும் தண்ணிரில் விழுகிறது.

அங்கங்களின் 'விண்விண்' செழிப்பு, ஆடைகளின் வர்ணங்கள், வாய்க்காலைச் சூழ்ந்த பசுமையுடன் இழையும் ஜாலங்களுடன் சேர்த்து வானத்தின் மந்தாரத்தையும் குழை ரங்கோலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/12&oldid=1495887" இலிருந்து மீள்விக்கப்பட்டது