பக்கம்:அவள்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


?莎 லா. ச. ராமாமிருதம் "Some brain fever போலத் தோன்றுகிறது. எப்படி இவ்வளவு சுருக்க develop ஆச்சு? என்ன நேர்ந்தது:” 'தெரியல்லே டாக்டர். டெஸ்கில் எழுதிக்கொண் டிருந்தவர், தி டு க் கி னு பக்கவாட்டில் சாய்ஞ்சவர் நாற்காலியையும் தன்மேல் தள்ளிக்கொண்டு விழுந்துட் டாராம். மூணு நாளா லேசா ஜுரம்தான் அத்தோடு நடமாட்டம், ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வீட்டில் இருங்கோளேன்னு சொல்லிப் பார்த்தேன். Accountcosing, எல்லாம் ஜலதோஷ ஜூரம்தான், போயே ஆகனும்'னுட்டார். பிற்பகல் மூணு மணி வேளைக்கு, வண்டியிலிருந்து ரெண்டு பேர் தூக்கிண்டு வந்து படுக்கை யில் கிடத்தினபோதே நினைப்பு இல்லை.' 'ஹும்-உள் ஜன்னி, ஆஸ்பத்திரிக்கு உடனே மேove பண்ணியாகனும், திவாகர். டாக்ஸியை அனுப்பிச்சுட் டேளா? No. இங்கிருந்து .ேH, 23 கி.மீ தாங்குமா? இந்த நிலையில், வழியில் ஏதானும் ஆச்சுன்னா? அவருடைய உரத்த சிந்தனை வயிற்றில் புளியைக் கரைத்தது. “He should be touching 108. We will get some ice and rub tin. இங்கே, நம் அவசரத்துக்கும் கேலைக்கும் கிட்ட ice & #5m go. 1065.5g, 2676? No, I won't touch him. now. The crisis must pass. otiutosłurr arabråg, Gurt & செய்யுங்க. ஒரு பன்னிரண்டு மணிவாக்கிலே வந்து பாக்கறேன். ஏம்மா உங்க வீட்டு மனுஷா, அவங்க வீட்டு மனுஷா? எல்லாரும் ஊரிலேயா? நெனைச்சேன். இந்த சமயத்திலே துணைக்காச்சும் பக்கத்திலே ஆள் இல்லாட்டி கஷ்டம தான்-’’ அவர் போனபிறகு ஒரக்கண்ணால் கவனித்தேன். ஒரு தீர்க்கம் தவிர, அந்த முகத்தில் ஏதும் படிக்க முடிய வில்லை. அது கவலையா, பயமா, சொல்ல முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/120&oldid=741459" இருந்து மீள்விக்கப்பட்டது