பக்கம்:அவள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8(? லா. ச. ராமாமிருதம் அவள் குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீலம் மின்னிற்று. ஏதோ வகையில் மாறி யிருந்தான். அவளே சுடர்போல் தாழ்ந்து, தணிந்து, ஆனால் அமைதியான திடத்தில், விளக்கெதிரே அமர்ந் தாள். - 'மாத்ரே தம்: சத்யப் பிரசாதினியே நம மஹாதாண்ட வ மஹாப்ரளய சாrவிண்யே நம: ஸ்தோத்ர ப்ரியே நம: தருண்டை நம: தீரா நம்: விஜயா நம: என் மனதில் நின்றதை, வரிசை தப்பி, அவள் சொன்னதைத் திருப்பிச் சொல்கிறேன். பிரார்த்தனை மனிதனின் கடைசி அடைக்கலம் இயற்கைதான். நம்புகிறோமோ இல்லையோ? வேறு வழியுமில்லை. இதுவும் ஒரு பழக்கதோஷம் தான். இதுவும் பயத்தின் உச்சத்தின் ஒரு உருத்தான். ஒன்று, பாஸ்கர். உனக்காக ஒருத்தி பிரார்த் கிறாள். ஏன்? ஒருத்தி இருப்பதனால்தான். ஒருத்தி மட்டுமன்று. அவள் மூலமாக விருத்தியாக இருக்கும் உன் குடும்பம் உன் முன்னோர்களிலிருந்து உன் வரை தழைத்து வந்திருக்கும் உன் குடும்பம் அவளுடைய பிரதிநிதித்வத்தில் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறது. ஆனால் எனக்கு?-ஓ இது உன்மேல் பொறாமையில் எழுந்த எண்ணம் அன்று. (ஆனால் அதையும் எப்படி நிச்சயமாய்ச் சொல்வது?) என் வேளை வரும்போது எனக்காக நானே பிரார்த்தனை செய்து கொள்வதா? இப்பவும் அதில் ஒரு அவமானம் தட்டுகிறது, பயம், பக்தி, நம்பிக்கை எதையும் மறுக்கும் எனக்கு; என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/124&oldid=741463" இருந்து மீள்விக்கப்பட்டது