பக்கம்:அவள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 லா. ச. ராமாமிருதம்

"அடை காக்க ஆரம்பிச்சாச்சோன்னோ? வீட்டுக்குள்ளே இருந்தது போக வெளியிலே வந்தாச்சா? அதனால் நான் வந்துடுவேனா? உங்கள் உடம்பைப்பத்தி நீங்கள் என்ன நினைச்சுண்டிருக்கேள்?"

"நீ கொஞ்சம் மரியாதை காட்டலாம் ஸேது"

“மரியாதையா?" பட்டாணிபோல் குதித்தான். 'எனக்கு உங்கள் உடம்புதான் இப்போ முக்கியம். உடம்பை வெச்சுண்டுதான் அப்புறம் அதுக்கு மரியாதை. இங்கே குளிர்னா என்னன்னு உங்களுக்குத் தெரியாது. சில்மாரில் கவ்விட்டா, மரணச்சளிதான். என்மேல் பழி சுமத்திட்டுப் போகணும்னு பாக்கறேளா? மரியாதையாம், மரியாதை!"

அவரைத் தூக்காத குறையாக, உள்ளே தள்ளிக் கொண்டு போனான். கதவு அவர்கள் பின்னால் அடித்து மூடிக்கொண்டது. சாகூியாக சைக்கிள் வெளியே நின்றது.

நானும் சாகூி நிற்கிறேன். அல்ல உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன், அல்ல இருக்கிறேன். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்று கல்மேல் ஏன் பழி? நான் நெகிழ்ந்துவிட்டேன். என் மேல் ஓரிரண்டு துாறல்- மேகத்தின் கண்ணீர்? அங்குமிங்குமாய் நகூத்ரங்கள் துாக்கம் கலைந்து விழித்துக் கொள்கின்றன.

சிருஷ்டி எங்களுக்குத் தந்த பாஷை மோனம். மோனத்துக்குப் பேச்சென்று இல்லை. ஆனால், மோனத்தில் இல்லாத பாஷையே இல்லை. அதே, உங்கள் பாஷை எனக்கு உண்ர்விலேயே புரிகிறது.

எங்களுக்கு வாயில்லை, சத்தமில்லே, தொட்டுக் கொள்ள நெஞ்சென்று தனி அங்கமில்லை. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/134&oldid=1496898" இலிருந்து மீள்விக்கப்பட்டது