பக்கம்:அவள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உச்சி வெய்யில் 97 இப்போது ஒரு தனிமை தெரிகிறது. இது உணர்வு பெற்றதன் விளைவு. அறிகிறேன். ஆயுசு, தனிமை, வெறிச்சோ-என்ன செய்வேன்? என்னைச் சுற்றி நல்லன, பொல்லாதன, சுகம், துக்கம், வாழ்வு, அறிவு நிகழ்வன யாவுக்கும் என்வரை செயலற்ற சாrதி நான் இந்த உணர்வு வேண்டாம் என்று மறுப்பதும் என்னிடம் இல்லையே! பெற்றபோது தேடியா பெற்றேன்? ஆனால் பெற்றதை இழக்கவும் மனமில்லை. சம்பவங் களின் பவனி, ஆச்சர்யம் குன்றா அனுபவம், உணர்வு இலாது இது சாத்தியமா? ஒரு நாள் இரவு டியூட்டியிலிருந்து திரும்பி வந்து பாயில் விழுந்து-கண்கள் எரிந்தன-அடித்துப் போட்டாற்போல் களைத்து, அவ்வப்போது கலைந்த துரக்கங்களிலிருந்து ஒருவாறு மீண்டு பார்வை சுவர்க்கடியாரத்தில் நிலைத் ததும் அது பதினொண்ணு காட்டியது அவனுக்கே ஆச்சர்யமாயிருந்தது. இத்தனை நேரமா ஆயிட்டுது? சோம்பல் முறித்து எழுந்து, வாயில் டூத்-ப்ரஷ்ஷாடன் வாசலுக்கு வந்தான். பாறைமேல் கூட்டம். ஐந்தாறுபேர் நெருக்கமாக நின்றாலும் கும்பல்தான். மேலும் கீழுமாய்ப் பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொண்டு, கொக்கரித்துக் கொண்டு, ஓரிரு விரல்கள் உற்சாகமாய் ஆகாயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு-அண்ணாந்தான். இரு புடவை, ரோஸ் கலர், பட்டை நீலக்கரை, உயரக் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. அவனும் ஒடிப் பாறைமீது ஏறினான். - கீழே, தண்ணீரில், மார்பளவு ஆழத்தில் அமிழ்ந்து, கைகளால் மார்பைப் பொத்திக்கொண்டு உட்காரவா, அ.-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/141&oldid=741482" இருந்து மீள்விக்கப்பட்டது